மங்காத்தா வில் அஞ்சலி-மகிழ்ச்சியில் அஞ்சலி

கடந்த சில தினங்களாகவே, அஜீத்தைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் பிரியாணி மயமாக இருந்தன. 


அஜீத் தன் கையால பிரியாணி சமைச்சுப் போட்டார் என த்ரிஷா ஒரு பக்கம் பேட்டி கொடுக்கிறார்... தல பிரியாணி என வெங்கட் பிரபு தன் பங்குக்கு பேஸ்புக்கில் அலறுகிறார்... அஜீத் எனக்கு மட்டும் தனியாக பிரியாணி செஞ்சுப் போட்டார் என கைனாட் என்ற வடக்கத்திய குத்தாட்ட அம்மணியும் போகுமிடமெல்லாம் கூறுகிறார்...

என்னடா இது... நடிப்பதை விட்டுவிட்டு பிரியாணி சமைப்பதில் பிஸியாகிவிட்டாரா அஜீத் என்று கிண்டலடிக்கும் அளவுக்கு 'பிரியாணி' புளித்துப் போய்விட்டது.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியும் தன் பங்குக்கு அஜீத் புகழ் பாடியுள்ளார். ஆனால் நல்லவேளை, இது பிரியாணி சமாச்சாரமில்லை. மங்காத்தா படத்தில் இப்போது அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

திடீரென இந்த வாய்ப்பு வந்ததாம் அவருக்கு. என்ன ரோல்...?

"அதை மட்டும் சொல்ல முடியாதுங்க. நல்ல வாய்ப்பு. அவ்வளவுதான் சொல்வேன். அஜீத்தை பக்கத்தின் நின்று பார்ப்பதே தனி சந்தோஷம். நானோ அவருடனே நடிக்கிறேன். என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதிலும் அவர் மிகவும் அக்கறை எடுத்து எனக்கு காட்சிகளை சொல்லித் தருவது பரவசமானது" என ஆனந்தப்படுகிறார் அஞ்சலி.

பாத்தும்மா... மன்மதன் அம்புவில் ஓவியாவுக்கு கிடைத்த 'ஆயா வேலை' மாதிரி ஆகிவிடப் போகிறது!
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply