1996 ம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்ற உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கை அணிகளும் மோதின, அப்போது இந்திய அணி இலங்கை அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்து உலகக்கோப்பை போட்டியை விட்டு அரை இறுதியுடன் வெளியேறியது , அந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்து இருக்க முடியாது.
தற்போது அந்த ஆட்டத்தை பற்றி புதிதாக சர்ச்சை ஒன்றை கிளப்பி உள்ளார் வினோத் காம்ப்ளி , அப்போது நடைபெற்ற உலககோப்பை அரை இறுதியில் மிகப்பெரிய சூதாட்டம் இந்திய வீரர்களால் நடை பெற்றது என்று ஒரு பெரிய புதிரை போட்டு உள்ளார்.
இதனை சரத் பவார் முழுமையாக நிராகரித்து உள்ளார், வினோத் காம்ப்ளியின் இந்த குற்ற சாட்டு மிகவும் வேடிக்கை ஆனது என்றும் , 15 ஆண்டுகள் கழித்து இவர் இதனை சொல்ல என்ன காரணம் என்றும், அப்படி அப்போது நடைபெற்று இருந்தால் அதனை இவர் அப்போதே வெளி இட்டு இருக்கலாமே? இவர் நிலையான மன நிலைமயை பெற்று இருந்தால் இவரும் சச்சினை போல வந்து இருக்காலாம் என்று கூறி உள்ளார்.

சமிபத்தில் முடிந்த உலககோப்பை (ICC WORLD CUP 2011) கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் உப்புல் தரங்கா ஊக்க மருந்து உட்கொண்டார் என தெரிய வந்துள்ளது, இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒத்துக்கொண்டுள்ளது.
இலங்கை அணியின் (SRI LANKA CRICKET TEAM) தொடக்க வீரர் உப்புல் தரங்கா தான் சமீபத்தில் விளையாடிய உலகக்கோப்பை தொடரின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டு விளையாடி தனது அணியை சில முக்கிய போட்டிகளில் வென்றும் கொடுத்துள்ளார், அதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதமும், மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதமும் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார், பிறகு அந்த வெற்றியின் மூலம் தான் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது எனபது குறிப்பிட தக்கது, இதனை இப்போது ஐ சி சி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இப்படி கள்ளத்தனமாக இலங்கை அணி உலகக்கோப்பையில் விளையாடி உள்ளது நிறுபனமாகி உள்ளது, இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் இவருடன் சேர்ந்து மற்றும் ஒரு வீரருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது, இவரை மட்டும் International Cricket Counsil விசாரிக்கிறது.
ஐ பி எல் 4 வது தொடரில் சென்னை அணி மீண்டும் சாம்பியன் ஆனது, நேற்று ஐ பி எல் இறுதிபோட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வலிந்து விழாகோலம் போல காட்சி அளித்தது.
டாசில் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பட்டிங்கை தேர்வு செய்தார், முரளி விஜயும் ஹஸ்ஸியும் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தனர், முதலில் விஜய் அரவித் வீசிய ஓவரில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார், இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்கு 160 ரன்களுக்கு ஆடி சாதனை படைத்தனர், பின்னர் ஹஸ்சி 63 ரன்கள் எடுத்த நிலையில் மோகம்ம்மத் பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு விஜயுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி கெயில் ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர் விளாசினார், நன்றாக ஆடிய விஜய் அரவிந்த் பந்தில் தூக்கி அடித்து ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார், இவர் 95 ரன்கள் அடித்தார். அடுத்து தோனியும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரை கெயில் வீச முதலில் மோர்கல்லும் அடுத்து ரைனாவும் அடுத்து அடுத்து ஆட்டமிழந்தனர், கடைசி பந்தில் பிராவோ சிக்ஸர் அடித்து சென்னை அணியை 200 ரன்கள் கடக்க உதவினார், கடைசியில் சென்னை அணி 205 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் சொதப்பல்:
அடுத்து ஆடிய பெங்களூர் அணி முதல் ஓவரிளியே கெயிலின் விக்கட்டை இழந்தது, இவர் அஸ்வின் சுழலில் டக் அவுட் ஆகி வெளியேறினார், அடுத்து அஸ்வின் தனுது இரண்டாம் ஓவரில் அகர்வாலையும் போல்டாக்கினார், பின்னர் ஜக்கடி சுழலில் தேவில்லியர்ஸ் வெளியேறினார், பிறகு போமேர்ச்பகும் இவர் சூலில் வெளியேற பெங்களூரின் ஐ பி எல் கனவு தவிடு பொடியாகியது,
முடிவில் பெங்களூர் 8 விக்கட் இழப்பிற்கு 147 ரன்கள் மாறுமே எடுத்தது, இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரண்டாவதுமுறையாக சாம்பியன் பட்டதை வென்று சாதனை படைத்தது.
விருதுகள் : ஆட்டநாயகன் விருதை முரளி விஜய் தட்டி சென்றார், அதிக ரன்களுக்கான ஆரஞ்ச் கேப்பை பெங்களூர் அணியின் கெய்லே தட்டி சென்றார், பர்பிள் கேப்பை மலிங்கா வசம் சென்றது.
சிறந்த வளரும் வீரராக கொல்கத்தாவின் இக்பால் அப்துல்லா பெற்றார், சிறந்த தனி வீரர் விருது பஞ்சாப் அணியின் வல்தாட்டி வசம் சென்றது.
விஷ்ணுவர்தனின் ஆசையும் அதை பொய்யாக்கிய சென்னை வீரர்கள் :
இங்கு விஷ்ணுவர்தனை பற்றி கூறியே ஆகவேண்டும், கொச்சி அணிக்கும் சென்னை அணிக்கும் முதல் போட்டி கொச்சியில் நடந்தது அப்போது போட்டி வர்ணனையாளர்கள் விஷ்ணுவர்தனிடம் மைக்கை நீட்டிய பொது "நீங்கள் இந்த போட்டியின் முடிவை பற்றி என்ன நினைகிறீர்கள்" என்ற போது, அதற்கு அவர் "சென்னை அணி முதலில் இந்த தொடரிலிருந்து வெளியேறினால் நான் சந்தோசபடுவேன் என்றார், அதாவது "தனக்கு ரெண்டு கண் போனாலும் பரவ இல்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்கிற நல்ல உளத்துடன் பேசினார், ஆனால் நடந்தது என்னவென்று வாசகர்ளாகிய உங்களுக்கு தெரியும் .

மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. நேற்று நடந்த முதலாவது பிளே ஆப் போட்டியில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை.
நான்காவது ஐபிஎல் போட்டித் தொடர் முடிவுக்கு வருகிறது. இறுதிப் போட்டி நெருங்கி விட்டது. நேற்று பிளே ஆப் போட்டிகள் தொடங்கின.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இதில் அட்டகாசமாக ஆடி சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
முதலில் ஆடிய பெங்களூர் அணி, சென்னையின் பந்து வீச்சை சமாளித்து சிறப்பாகி ஆடி 175 ரன்களைக் குவி்த்தது.
சென்னை பந்து வீச்சை குறிப்பாக அல்பி மார்க்கலின் பந்து வீச்சை பெங்களூர் அணி தவிடுபொடியாக்கியது. அல்பி மார்க்கல் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தார் என்றாலும் 33 ரன்களை வாரிக்கொடுத்து விட்டார். பிரேவோ, ஜகாதி, ரெய்னா என அனைவரையும் நையப்புடைத்தனர் பெங்களூர் வீரர்கள்.
அந்த அணியின் விராத் கோலி அபாரமாக ஆடி 70 ரன்களைக் குவித்தார்.
பின்னர் ஆட வந்த சென்னை அணி, பெங்களூர் அணியின் பந்து வீச்சை மிகுந்த நம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் சந்தித்தது.
ஹஸ்ஸி டக் ஆகி வெளியேறினார். முரளி விஜய் 5 ரன்களில் அவுட்டானார். ஆனால் சுரேஷ் ரெய்னாவும், பத்ரிநாத், கேப்டன் டோணியும் சிறப்பாக ஆடி அணியை ஸ்திரப்படுத்தினர்.
ரெய்னா 50 பந்துகளைச் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களைக் குவித்தார். பத்ரிநாத் 32 பந்துகளில் 34 ரன்களைக் குவிக்க, கேப்டன் டோணி, 19 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தார்.
பந்து வீச்சில் சொதப்பிய அல்பி மார்க்கல், பேட்டிங்கில் பிரமாதப்படுத்தினார். ஆட்டமிழக்காமல் 28 ரன்களைக் குவித்த அவர் இதற்காக சந்தித்தது 10 பந்துகளைத்தான். அவர் குவித்த ரன்களில் 18 ரன்கள் சிக்ஸர்கள் மூலம் வந்ததாகும்.
இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த சென்னை அணி 177 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
பெங்களூருக்கு இன்னொரு வாய்ப்பு:
நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட பெங்களூர் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே மும்பையில் இன்று நடைபெறும் இன்னொரு பிளே ஆப் போட்டியில் வெல்லும் அணியுடன், நாளை பெங்களூர் மோதும். அதில் வெற்றி பெறும் அணிதான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று இரவு நடைபெறும் ஐ பி எல் கிரிக்கேட் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அணிக்கு இன்று பலத்த பின்னடைவாக சேவாகின் இழப்பு இருக்கும்...
டெல்லி அணியின் கேப்டன் சேவாக் காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ பி எல் போட்டி தொடரிலிருந்து வெளியேறுகிறார், இவர் ஐ பி எல் போட்டி யை மட்டும் இழக்க வில்லை மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரையும் இழக்கிறார்.
கேப்டன் ஹோப்ஸ்: சேவாகின் காயம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் அணிக்கு தலைமை தாங்குகிறார்... டெல்லி அணி இதுவரை எட்டு புள்ளிகலுடன் உள்ளது...
சென்னைக்கு லாபம்: சேவாக் இல்லாத அணியுடன் மோதும் சென்னை அணிக்கு இது வெற்றிக்கு பெரிய சந்தர்பமாக அமையும் இன்றைய போட்டி...
ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இளம் கேப்டன்:
வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.
அரவிந்த் அபாரம்:
இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.
"சிக்சர்' கெய்ல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.
வார்ன் சோகம்:
இத்தொடருடன் ஓய்வு பெறும் ராஜஸ்தான் கேப்டன் வார்ன், தனது அணியின் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் பங்கேற்ற கடைசி ஐ.பி.எல்., போட்டியில் தோல்வியுடன் விடைபெற நேர்ந்தது.
ஆட்ட நாயகன் விருதை அரவிந்த் தட்டிச் சென்றார்.

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.
ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.