சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவானதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுக்காக 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 2.88 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப் பட்டனர். தேர்தலில் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள்.
வாக்காளர்கள் 90 சதவீதம் பேருக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இந்த பூத் சிலிப் இருந்தால் 13 வகையான ஆவணங்கள் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையிலும் விளம்பரங்களைச் செய்திருந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலையிலேயே 66,799 ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. சரியாக நேற்றுகாலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல மாவட்டங்களில் முன்னதாகவே பொதுமக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இளைஞர்கள், வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக குவிந்தனர்.
குறிப்பாக இளைஞர்களும், இதுவரை வாக்களிக்காமல் தேர்தல் நாளன்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களும் கூட காலையிலேயே வரிசையில் நின்றிருப்பதை காண முடிந்தது. கார்கள், பைக்குகளில் பலரும் வந்து வரிசையில் நின்றதை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதடைந்தன. ஆரம்பத்திலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக சரி செய்யப்பட்டன. இதனால் தாமதம் அதிக அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்தப்பட்டன. அதன் பின்னர்தான், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , அதற்குரிய பெட்டிக்குள் வைக்கப்பட்டன. ஒரு மாதம் காக்க: ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நேற்று இரவே வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஓட்டு இயந்திரங்கள் , ஓட்டு எண்ணும் இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, Ôதமிழகத்தில் சுமார் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவாகியுள்ளது.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. ஒரு சில வாக்குச் சாவடிகளில் எந்திரங்கள் கோளாறு என்று புகார்கள் வந்தன. அதனால் திருண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி தொகுதியிலும் வாக்குச் சாவடிகளில் எந்திரக் கோளாறாலும், நெய்வேலியில் 2 எந்திரத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியதால் அங்கும் வருகிற 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றார். அதேபோல டிஜிபி போலாநாத்தும், தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவித்தார்.
தலைவர்கள் தொகுதிகளில்...
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் 82 சதவீதம் வாக்குப்பதிவாகின. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 66 சதவீதமும், ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 73 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் 81.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் 65 சதவீதம் ஓட்டு பதிவானது.

0 comments