ஹசாறேவுக்கு மோடி கடிதம்!

ஆமதாபாத்/பாட்னா, ஏப். 11: தம்மையும் குஜராத் மாநிலத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்படலாம் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹஸôரே, குஜராத் மற்றும் பிகார் மாநில முதல்வர்கள் வளர்ச்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாகப் பாராட்டினார்.
இது தொடர்பாக ஹஸôரேவுக்கு மோடி திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதன் விவரம்:
என்னையும் எனது மாநிலத்தையும் நீங்கள் பாராட்டியது பற்றிக் கேள்விப்பட்டேன். இதற்காக நானும் எனது மாநிலமும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். இதை எங்களுக்கான ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் குஜராத் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் சிலரால் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் அவதூறு பிரசாரத்துக்கு நீங்கள் இலக்காகக்கூடும் என்கிற அச்சமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
உங்களது அன்பையும், தியாகத்தையும், சத்தியத்தையும் களங்கப்படுத்த அவர்கள் முயற்சிப்பார்கள். என்னையும் என் மாநிலத்தையும் பற்றி நீங்கள் பேசியதால் கிடைத்திருக்கும் வாய்ப்பை உங்களைக் அவமானப்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதுவரை யார் யாரெல்லாம் குஜராத்தையும் என்னையும் பாராட்டிப் பேசினார்களோ அவர்கள் அனைவருமே அவதூறு பிரசாரத்துக்கு இலக்காகியிருக்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
குஜராத்தின் வளர்ச்சியை சிலாகித்துப் பேசியதற்காக கேரள மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதியான அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
குஜராத் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஒரு விடியோவில் பணியாற்றியதற்காக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது அவதூறு பிரசாரம் செய்யப்பட்டது. இதே காரணத்துக்காக தேவ்பாண்ட் இஸ்லாமிய பள்ளியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த மெüலானா குலாம் வாஸ்தன்வி கடும் கண்டனத்துக்கு ஆளானார்.
அண்மையில் குஜராத்தை ஆதரித்துப் பேசியதற்காக இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சின்காவை குஜராத்தை வெறுக்கும் குழுக்கள் கடுமையாக விமர்சித்தன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகூட கோரப்பட்டது.
குஜராத் மீது வெறுப்பு கொண்டிருப்போருக்கும் இங்கு நடக்கும் வளர்ச்சிப் பணிகள் பிடிக்கவில்லை. குஜராத்தின் பெயர் எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அங்கெல்லாம் இவர்கள் உடனடியாக வந்து அவதூறு பரப்பத் தொடங்கிவிடுகின்றனர் என்று மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நிதீஷ் குமார்: பிகார் மாநில வளர்ச்சியைப் பாராட்டியதற்காக அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் ஹஸôரேவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஹஸôரேவின் பாராட்டை ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பாராட்டு நல்ல பணிகளைத் தொடர எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply