ஐ பி எல் 4 இறுதி போட்டியில் சென்னை அணி! விளாசிய ரெய்னா!!


மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. நேற்று நடந்த முதலாவது பிளே ஆப் போட்டியில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை.

நான்காவது ஐபிஎல் போட்டித் தொடர் முடிவுக்கு வருகிறது. இறுதிப் போட்டி நெருங்கி விட்டது. நேற்று பிளே ஆப் போட்டிகள் தொடங்கின.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இதில் அட்டகாசமாக ஆடி சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் ஆடிய பெங்களூர் அணி, சென்னையின் பந்து வீச்சை சமாளித்து சிறப்பாகி ஆடி 175 ரன்களைக் குவி்த்தது.

சென்னை பந்து வீச்சை குறிப்பாக அல்பி மார்க்கலின் பந்து வீச்சை பெங்களூர் அணி தவிடுபொடியாக்கியது. அல்பி மார்க்கல் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தார் என்றாலும் 33 ரன்களை வாரிக்கொடுத்து விட்டார். பிரேவோ, ஜகாதி, ரெய்னா என அனைவரையும் நையப்புடைத்தனர் பெங்களூர் வீரர்கள்.

அந்த அணியின் விராத் கோலி அபாரமாக ஆடி 70 ரன்களைக் குவித்தார்.

பின்னர் ஆட வந்த சென்னை அணி, பெங்களூர் அணியின் பந்து வீச்சை மிகுந்த நம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் சந்தித்தது.

ஹஸ்ஸி டக் ஆகி வெளியேறினார். முரளி விஜய் 5 ரன்களில் அவுட்டானார். ஆனால் சுரேஷ் ரெய்னாவும், பத்ரிநாத், கேப்டன் டோணியும் சிறப்பாக ஆடி அணியை ஸ்திரப்படுத்தினர்.

ரெய்னா 50 பந்துகளைச் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களைக் குவித்தார். பத்ரிநாத் 32 பந்துகளில் 34 ரன்களைக் குவிக்க, கேப்டன் டோணி, 19 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தார்.

பந்து வீச்சில் சொதப்பிய அல்பி மார்க்கல், பேட்டிங்கில் பிரமாதப்படுத்தினார். ஆட்டமிழக்காமல் 28 ரன்களைக் குவித்த அவர் இதற்காக சந்தித்தது 10 பந்துகளைத்தான். அவர் குவித்த ரன்களில் 18 ரன்கள் சிக்ஸர்கள் மூலம் வந்ததாகும்.

இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த சென்னை அணி 177 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பெங்களூருக்கு இன்னொரு வாய்ப்பு:

நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட பெங்களூர் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே மும்பையில் இன்று நடைபெறும் இன்னொரு பிளே ஆப் போட்டியில் வெல்லும் அணியுடன், நாளை பெங்களூர் மோதும். அதில் வெற்றி பெறும் அணிதான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. CHENNAI ROCKS

Leave a Reply