ஐ பி எல் சென்னை அணி மீண்டும் சாம்பியன்-விஜய், அஸ்வின் அசத்தல்!

ஐ பி எல் 4 வது தொடரில் சென்னை அணி மீண்டும் சாம்பியன் ஆனது, நேற்று ஐ பி எல் இறுதிபோட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வலிந்து விழாகோலம் போல காட்சி அளித்தது.

டாசில் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பட்டிங்கை தேர்வு செய்தார், முரளி விஜயும் ஹஸ்ஸியும் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தனர், முதலில் விஜய் அரவித் வீசிய ஓவரில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார், இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்கு 160 ரன்களுக்கு ஆடி சாதனை படைத்தனர், பின்னர் ஹஸ்சி 63 ரன்கள் எடுத்த நிலையில் மோகம்ம்மத் பந்தில் ஆட்டமிழந்தார்.

பிறகு விஜயுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி கெயில் ஓவரில் தொடர்ந்து இரு  சிக்ஸர் விளாசினார், நன்றாக ஆடிய விஜய் அரவிந்த் பந்தில் தூக்கி அடித்து ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார், இவர் 95 ரன்கள் அடித்தார். அடுத்து தோனியும் 22 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை கெயில் வீச முதலில் மோர்கல்லும் அடுத்து ரைனாவும் அடுத்து அடுத்து ஆட்டமிழந்தனர், கடைசி பந்தில் பிராவோ சிக்ஸர் அடித்து சென்னை அணியை 200 ரன்கள் கடக்க உதவினார், கடைசியில் சென்னை அணி 205 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் சொதப்பல்:

அடுத்து ஆடிய பெங்களூர் அணி முதல் ஓவரிளியே கெயிலின் விக்கட்டை இழந்தது, இவர் அஸ்வின் சுழலில் டக் அவுட் ஆகி வெளியேறினார், அடுத்து அஸ்வின் தனுது இரண்டாம் ஓவரில் அகர்வாலையும் போல்டாக்கினார், பின்னர் ஜக்கடி சுழலில் தேவில்லியர்ஸ் வெளியேறினார், பிறகு போமேர்ச்பகும் இவர் சூலில் வெளியேற பெங்களூரின் ஐ பி எல் கனவு தவிடு பொடியாகியது,

முடிவில் பெங்களூர் 8 விக்கட்  இழப்பிற்கு 147 ரன்கள் மாறுமே எடுத்தது, இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரண்டாவதுமுறையாக சாம்பியன் பட்டதை வென்று சாதனை படைத்தது.

விருதுகள் : ஆட்டநாயகன் விருதை முரளி விஜய் தட்டி சென்றார், அதிக ரன்களுக்கான ஆரஞ்ச் கேப்பை பெங்களூர் அணியின் கெய்லே தட்டி சென்றார், பர்பிள் கேப்பை மலிங்கா வசம் சென்றது.

சிறந்த வளரும் வீரராக கொல்கத்தாவின் இக்பால் அப்துல்லா பெற்றார், சிறந்த தனி வீரர் விருது பஞ்சாப் அணியின் வல்தாட்டி வசம் சென்றது.

விஷ்ணுவர்தனின் ஆசையும் அதை பொய்யாக்கிய சென்னை வீரர்கள் :

இங்கு விஷ்ணுவர்தனை பற்றி கூறியே ஆகவேண்டும், கொச்சி அணிக்கும் சென்னை அணிக்கும் முதல் போட்டி கொச்சியில் நடந்தது அப்போது போட்டி வர்ணனையாளர்கள் விஷ்ணுவர்தனிடம் மைக்கை நீட்டிய பொது "நீங்கள் இந்த போட்டியின் முடிவை பற்றி என்ன நினைகிறீர்கள்" என்ற போது, அதற்கு அவர் "சென்னை அணி முதலில் இந்த தொடரிலிருந்து வெளியேறினால் நான் சந்தோசபடுவேன் என்றார், அதாவது "தனக்கு ரெண்டு கண் போனாலும் பரவ இல்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்கிற நல்ல உளத்துடன் பேசினார், ஆனால் நடந்தது என்னவென்று வாசகர்ளாகிய உங்களுக்கு தெரியும் . 
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

3 comments

  1. chennai superkingsukku periya visil adinga

  2. இந்த மலையாளி நாய்களே இப்படி தான். இவனுங்க எல்லாம் தமிழ் நாட்டில பணம் சம்பாதிச்சுட்டு தமிழர்களுக்கே ஆப்பு அடிக்கிறாங்க. உதாரணமா சினிமா டைரக்டர் கௌதம் மேனன், இந்த நாய் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் ஆர்யா எல்லோருமே அப்படி தான். இவனுங்க கேரளாவில போய் படம் எடுத்தா ஒரு நாய் கூட இவனுங்க படத்தை பார்க்க மாட்டானுங்க. 99% மலையாளிங்க எல்லோரும் இப்படி தான் இருக்காங்க. அவனுங்க யாரையும் காலை வாருவதற்கு தயங்கவே மாட்டாங்க. இவனுங்களுக்கு ஈவு, இறக்கம் என்பது கிடையவே கிடையாது. நான் எல்லா தமிழ் மக்களையும் கேட்டுகிறேன், ஒரு தமிழனா இருந்து இன்னொரு தமிழனுக்கு உதவி பண்ணுங்க. அதே மாதிரி வேறு மொழி பேசுறவங்களுக்கு மறியாது கொடுங்க. நான் தமிழனா பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன். அடுத்து ஒரு பிறவின்னு இருந்த நானும் நம்ம தமிழ் நாட்டிலே ஒரு தமிழனா பிறக்கணும்னு ஆசை படுகிறேன்.

    சரவணன், பிரான்சில் இருந்து

  3. சரியாக சொனீங்க சரவணன்

Leave a Reply