நல்ல வாய்ப்பு கொடுத்தால்- பாவனா ஏக்கம்



வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று இப்பொது புது ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் பாவனா


தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.

ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்," என்றார்.
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply