ரஜினியை கேவலப்படுத்தும் நண்பர்களே ஒரு நிமிடம் கவனிக்க!!!

முதற்குறிப்பு : நமது tamilnewsduniya தளத்தில் ரஜினியை பற்றி வந்த சில பிரசுரங்களை படித்து மனம் உடைந்த ஒரு ரஜினி ரசிகர் நமக்கு மினஞ்சல் மூலமாக தனது மனக்குமுறல்களை தெரிவித்து உள்ளார்

நீங்களும் உங்கள் செய்தி தொகுப்புகள் மற்றும் சிறப்பு கட்டுரைகளை இங்கே சமர்பிக்கலாம், நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி tamilnewsduniya.user@blogger.com.

இதோ அந்த வாசகரின் குமுறல்கள்,


பெருமதிப்பு மிக்க அறிவாளிகளே சான்றோரே ரஜினியை விமர்சித்து பிரபலமடைய துடிக்கும் எழுத்தாளர்களே வணக்கம் எனக்கு உங்களை போல வார்த்தைகளால் வசீகரிக்க தெரியாது , உங்கள் எழுத்துக்கள் அளவுக்கு என் எழுத்து அழகானதல்ல , உங்களுடன் வாதாடி ஜெயிக்கும் திறமை பெறாத ஒரு சாதாரண, ரஜினியின் ரசிகன் நான் .

சமீபத்தில் உங்களின் பலரது விமர்சனங்களையும் சொல்லாடல்களையும் பார்த்து நொந்து போயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் , இது வெறும் வெற்று மனக்குமுறல் மட்டுமே.

உங்களில் பலருக்கும் உங்களின் எழுத்துக்களின் மூலமாய் நான் அறிவது ரஜினியின் இந்த அபார வளர்ச்சியின் மீதான பொறாமையும் அவரை போல நம்மால் ஆக முடியவில்லையே என்கிற காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே . அப்படி என்ன தவறு செய்து விட்டார் ரஜினி , தன்னை நம்பி படமெடுத்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அதன் மூலம் அப்படத்திற்கு ஒரு தவறான அடையாளம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என எண்ணியதும் தவறா? , அதற்காக தன் தன்மானத்தையும் இழக்க தயாராக இருக்கும் என் ரஜினி எங்கே , தன் பிரபல்யத்திற்க்காக ரஜினியை சொறிந்து சுகம் தேடும் இந்த அற்பர்கள் எங்கே .

அவர் அரசியலுக்கு வர என்றுமே ஆசைப்படாதவர் , நம் மக்கள் தானே அவரது அரிய குணம் கண்டு அரியணைக்கு வா தலைவா என அழைத்தனர் . நம் மக்கள் என்ன அறிவிலிகளா , அவர்களுக்கு அறிவில்லையா , ஒட்டு மொத்த தமிழனும் முட்டாள்களா? .

அவர் அரசியல் வசனம் பேசித்தான் அவரது படங்களை ஓட வைக்க வேண்டும் என்ற நிலை எப்போதுமே இருந்ததில்லை , அது நீங்களாகவே உருவாக்க முயலும் ஒரு வகை மாயையே தவிர வேறொன்றுமில்லை . அவரது எத்தனை படங்களை அப்படி ஓட வைத்தார் என உங்களில் யாராவது கூற இயலுமா? விட்டால் அவர் சூப்பர்ஸ்டார் ஆனதே அரசியல் பேசித்தான் என நீங்கள் கூறினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை .

ஓகேனக்கல் பிரச்சனையில் எத்தனை தைரியமாக தனது பிறந்த மண்ணின் மைந்தர்களையே உதைக்க வேண்டும் என கூறியவர் அவர் , இன்றும் கூட தனது தமிழ்மக்களுக்கு அவரால் நாளைக்கு கர்நாடக இன வெறியர்களால் எந்த வித பாதிப்பும் உண்டாக கூடாது என்பதற்காகவே அவர் அப்படி ஒரு அறிக்கை விட நேர்ந்தது . உண்மையில் ரஜினி பாயும் புலிதான் . அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .

குசேலன் திரைப்படத்தின் தோல்விக்கு ஒட்டு மொத்தமாய் ரஜினியை குற்றம் சொல்லும் பலருக்கும் தெரியவில்லை அப்படத்தில் பலரது உழைப்பும் அடங்கியிருக்கிறது என்று , வெற்றி என்றால் மட்டும் அதை பங்கு போட வரும் குள்ளநரி கூட்டம் , தோல்வி என்றதும் விலகி ஓடுவது மிகக்கொடுமை , அதை ரஜினியால் மட்டுமே உணர முடியும் .

நம்மில் எத்தனை பேர் மற்ற படங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறோம் , ரஜினி படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பாருங்கள் புரியும் , ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்தும் படமாகத்தான் ரஜினியின் படங்கள் இருந்திருக்கிறது , ரஜினியின் படங்களில் ஆபாசம் என்றால் குடும்பத்துடன் எத்தனை பேர் வருவர் தியேட்டருக்கு . புரட்சிதலைவர் படங்களில் இல்லாத ஆபாசமா அப்போதெல்லாம் எங்கு போயிருந்தனர் இந்த அறிவுஜீவிகள் .

அறிவுஜீவிகளின் கண்களில் ரஜினி செய்யும் நல்லது என்றைக்குமே தெரிவதில்லை ,அவரது வீழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த கண்கொத்தி பாம்புகளின் கண்கள் ரஜினியின் வெற்றியை ஒரு நாளும் பார்பதில்லை .

மக்கள் மெகா சீரியல் மயக்கத்தில் தியேட்டருக்கே வராது , பல சிறிய தியேட்டர்களும் மூடும் நிலையில் இருந்த போதுதானே எங்கள் ரஜினியின் சந்திரமுகி வந்தது , மக்கள் குடும்பத்தோடு திருவிழா போல தியேட்டருக்கு படையெடுத்தது அப்போதுதான் , வீழந்து கிடந்த திரையுலகத்திற்கு குளுக்கோஸ் போல அல்லவா அந்த படம் திரையுலகத்தினருக்கு அமைந்தது . அப்போது எங்கு போயிருந்தனர் இந்த சான்றோர்கள் .

உங்களை போன்றோர் செய்யும் விசமங்களுக்கு பயந்துதானே அவர் அடிக்கடி நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறார் , அவரை அங்கேயே அனுப்பி வைக்கு முயலும் உங்கள் முயற்சி நிச்சயம் பலிக்காது .

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை என் தலைவன் இத்தனை வருட உழைப்பில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் , அவரை சீண்டுபவர்களுக்கு ரசிகர்களாகிய நாங்கள் சொல்லிக்கொள்வதெல்லாம் , என் தலைவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பதென்று , அவர் ஒரு குதிரை , விழுந்தாலும் உடனே எழுவார் . ஒடி ஒளிந்து கொள்ளுங்கள் அறிவுஜீவிகளே எங்கள் தலைவனின் அன்பால் திரண்ட ரசிகர் கூட்டம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் , பிழைத்து போங்கள் ரஜினியை ஏசிபிழைக்கும் எழுத்து வியாபாரிகளே உங்களது எழுத்து தொழிலை மட்டும் பார்த்து கொண்டு . இனி உங்களுக்கான பதிலை எங்கள் தலைவர் தன் அடுத்த படத்தில் தருவார் , அதற்கு முன் அவர்தரும் முன்னோட்ட படங்களை உங்கள் பத்திரிக்கைகளில் இட்டு கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள் .

இப்படிக்கு

உழைப்பால் உயர துடிக்கும் ரஜினியின் பல கோடி ரசிகர்களில் ஒருவன்.
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

11 comments

  1. டுபுக்கு
    10 August 2011 at 10:48 pm

    வேணும்னா இந்த மெண்டல் ரஜினியின் செருப்பை வைத்து தமிழகத்தை ஆலசொல்வான் போல் இருக்கிறதே, பாடு பயலே, யோவ் எடிட்டர் இந்த வாசகரின் ஈமெயில் போன் நம்பர் குடுய்யா, ஏன் ஆத்திரம் தீர இவனை திட்டனும்...

  2. JDi loosu payala Dubuku, Thappu seiyara aairam pera vittutu Nallathu seiyara oruthana enda ippadi kevala paduthuringa!

  3. ada badu pasangala oruthar unmaya sonna unakku yen arikuthu,kuthuthu kudayuthu......kutram ulla nenjam than da kurukurukum mairu

  4. ootha avusari pasangala inaki avar range ku entha mairalada vara mudiyum....entha influence um ilama etho oru oorla irunthu vanthu kashta pattu mela oru aal vantha pothume oru thanukum pudikathe..... inaki ila enaikume avar than da super star avar ku apram ajith da.....

  5. முதலில் அடுத்தவனை தல,தலைவன் என தலை மேலே தூக்கி பேசும் செயலை விடவும்,அவர்களும் சக மனிதர்கள்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள் சம்பாதிகிரர்கள் அல்லது கொள்ளை அடிக்கிறார்கள் நாம ஏனையா அவனுங்களே இப்படி உயர்த்தணும் தலை நிமிர்ந்து நடங்க

  6. டுபுக்கு நாயீ . ....ரஜினியிடம் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும் கூட்டமிது .. நீ வையும் சூ ..வையும் மூடி கொண்டு உன் வேலையை மட்டும் பாரு ..உனக்கு நீயே நல்ல பெயர் வைதுகொண்டுள்ளாய் ...பேரை பார்த்த உடனேயே உன் லெவல் புரிஞ்சிடுச்சு ....சகதியில் கல்லெறிந்தால் நம் மீது தான் தெறிக்கும்

  7. korai solla oru yogithai venum. dupukku nayi. mudallil nee enna sathichirukke? unnoda contribution tamilukku evvalau? iyal isai nadakam. ithu oru sariththiram. ithula yethavathu pudingi sathichchirunthenna nee pesa vakku irukku. dont teach your mom and dad how to give birth of a baby. sathichchvarai oru sakkadai vimarsanam seiiyuthu. rommba paruppunnu ninappu.

  8. mela karuthu sonna naayee mattum saathichu kilichuduchi, thairiyam irunthaal un pera solludaa naaye

  9. உங்கள் நண்பன்
    25 August 2011 at 5:46 am

    எங்கே போய் கொண்டிருக்குது உலகம் ஈமெயில், வலைதளம் எவ்வளவு பயன் உள்ளது ஆனால் வெட்டி கதை பேசும் மனிதர்களாக நாம் மாறிவருகிறோம் நல்லவற்றை பேசுவோம் நன்றி வாழ்க சமுதாயம் வாழ்க மனித இனம். என்றும் வருத்ததுடன் உங்கள் நண்பன்.

  10. உங்கள் நண்பனுக்கு: nanbaa நீ ஏன் வருத்த படுகிறாய், நீ ரஜினி ரசிகனா நீ

  11. Ada Pakkigalaa... Antha naathaari inga vanthu Paal Thaakarayai paarthu nee thaan kadavul-nu sollraanda...sonnaan. (Mumbai Thinathanthi -la naan padichen..)... Paarudaa Koiyaala, Tamilana adichavan Kadavulaam..Etha solravan Tamil naattula irukiravan pozhakkiravan...Enna kodumadaa koiyaala...Mutta pasangalay ungala ellaam thiruthavae mudiyaathu daa...

Leave a Reply