பிரபலங்களின் மனசாட்சி - பகீர் உண்மைகள் - 1

தமிழ் செய்தி உலகம் வாசகர்களுக்கு ஒரு அறிய நற்பகுதி இனி வாரா வாரம் இங்கே பிரசுரிக்கப்படும் என்று அறிவிக்கபடுகிறது. 

அதாவது நமது நாட்டில் உள்ள பிரபலங்களின் அந்தரங்கத்தை அதன் மனசாட்சியின் மூலம் இங்கே அம்பலப்படுதுவத்தின் மூலம் வாசகர்களின் கற்பனைக்கு இந்த கட்டுரையின் வரவேற்ப்பை அவரவர் கருத்துக்கள் மூலம் விமர்சிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

ஒருவர் புகழ்பெறத் தொடங்கி பிரபலமடைகிறார் என்றால் பிரச்னைகளும் அவரைத் தொடரத் தொடங்கிவிடுகிறது. கொஞ்ச நாட்களில் அவரின் பழைய உண்மையான முகம் வெளியில் யாருக்கும். தெரியாமல் மறைக்கப்படுகிறது. அந்த நபர் தன்னை எப்படி காட்டிக்கொள்ள நினைக்கிறாரோ அந்த அளவே வெளியுலகமும் அவரை அறிந்துகொள்கிறது. எனவே அவர்கள் வெளியில் ஒரு முகத்தோடும், மறைவில் ஒரு முகத்தோடும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை அவர்களுக்கே காட்டும் கண்ணாடிதான் இந்தத் தொடர். மக்களும் தங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவர்களின் தலைவர்களைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள இந்தத் தொடர் நிச்சயம் உதவும் என்று நம்புகிறோம்.

இதன்மூலம் தங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கவும் அவர்கள் தடம்புரளும் நேரங்களில் தட்டி வைக்கவும் முடியும். தமிழகத்தில் அரசியல், சினிமா, அதிகாரம் என பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களைப் பற்றி அலசி ஆராயும் பகுதி இது. அவர்களைப் பற்றிய உண்மைகளை அப்படியே வாசகர்களுக்குத் தருகிறோம். வாசகர்களே அந்தந்த வி.ஐ.பி.க்களை மதிப்பீடு செய்துகொள்ளலாம். உண்மைக்கு மாறாகவோ, சுவாரஸ்யத்திற்காகவோ எதுவும் மிகைப்படுத் தாமல் எழுதுவதே இந்தப் பகுதியின் சிறப்பம்சம். எந்த வி.ஐ.பி.யிடம், பேட்டிக்காகப் பேசினாலும் அவர்கள் தங்களின் புது முகத்தையே வெளிப்படுத்துவார்கள். அவர்களின் இன்னொரு பகுதியை, இருட்டுப் பகுதியை வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அவர்களின் மனசாட்சிதான் பேச வேண்டும். ஆகவே, மனசாட்சியை பேட்டி எடுத்தால் அவை கூறும் உண்மையையே இங்கு தரப்போகிறேன்.

இனி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பிரபலத்திடமும் மனசாட்சியின் வாக்குமூலம் பெற்று வாசகர்களுக்குத் தரப்பட இருக்கிறது.

தமிழக அரசியல் எல்லை ஆரம்பிப்பதே வடசென்னையிலிருந்துதான். எனவே, நாமும் வடசென்னை வி.ஐ.பி.யிலிருந்தே இந்த தொடரைத் தொடங்குகிறோம். வடசென்னை அரசியலில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் இவர் முக்கியமான நபர்தான். இன்றும் முதலமைச்சரின் அடுத்த நாற்காலியில் பந்தாவாக, பெரிய மனிதராக அமர்ந்து அரசியல் நடத்திவரும் அந்த வி.ஐ.பி.யின் மனசாட்சியின் வாக்குமூலம் இதோ உங்களுக்காக.

‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திராவில்தான். எங்கப்பா ரயில்வேயில் வேலை செய்துகிட்டிருந்தாரு. எங்க வீட்டில பசங்க மொத்தம் ஆறு பேரு. வருமானம் போதாம நாங்க குடும்பத்தோட சென்னைக்கு வந்து குடியேறினோம். ஆந்திராவுல எஸ்.எஸ்.எல்.சி., வரைக்கும் படிச்சிருந்த எனக்கு சென்னையில போரூர் பக்கத்துல ஒரு தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது.

அங்க யூனியன் பிரச்னை வந்தபோது நான் மேனேஜ்மெண்ட்டை எதிர்த்து குரல் கொடுத்தேன். மேனேஜ்மெண்ட் ஆட்கள் மேல ஆசிட் அடிச்சேன்னு சொல்லி என்னை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. எதிர்காலத்துல என்மீது ஆசிட் வழக்குப் போடறதுக்கு இதுவே அடித்தளமாயிடுச்சு. எங்கப்பா இறந்ததற்காக எங்க அண்ணனுக்கு ரயில்வேயில் வேலை கிடைச்சுது.. நாங்க வண்ணாரப்பேட்டையில் பத்துக்குப் பத்து அடி ஓட்டு வீட்ல வாடகைக்கு இருந்தோம். என் தம்பி பாரிமுனைப் பக்கம் ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்தான். அவன் வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் ராயபுரத்துல இறங்கிதான் வீட்டுக்கு வருவான். அடுத்த பஸ் ஸ்டாப்புலதான் எங்க வீடு. ஆனா அங்க இறங்கினா ஐந்து பைசா அதிகமாகும். எனவே, இருபது பைசா டிக்கெட் எடுத்து ராயபுரத்துல இறங்கிடுவான். அவ்வளவு கஷ்டமான நிலைமை.

குடும்பத்துல இருக்குறவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் நான் மட்டும் கொஞ்சமும் பொறுப்பில்லாம சுத்திக்கிட்டிருந்தேன். எங்க வீட்டுத் திண்ணையில சாயங்காலத்துல ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். அந்த நேரத்துலதான் எம்.ஜி.ஆர். ‘அ.தி.மு.க.’ என்ற கட்சியை ஆரம்பிச்சாரு. அப்போ, நான் அ.தி.மு.க. கூட்டம் ஏதாவது நடந்தா போய் கலந்துப்பேன். சென்னையிலே அ.தி.மு.க.வின் மிகப் பெரிய சக்தியாக வண்ணை மு. பாண்டியன் இருந்தார். தலைவரோட ரொம்ப நெருக்கமா இருந்த பாண்டியன் வீட்டுக்கு தினமும் நான் போய் வரத் தொடங்கினேன். அப்போ ஜேப்பியாரும் பாண்டியன் வீட்டுக்கு வந்து போவார். எங்களை பாண்டியன்தான் தலைவர்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார்.

அரசியலில் தலைவரின் அறிமுகம் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் பண வருமானத்தை தேடத் தொடங்கினேன். நாங்கள் வாடகைக்கிருந்த வீட்டின் பின்பக்கம் அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு கொஞ்சம் காலி மனை இருந்தது. அங்கு ஒரு அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தடியில் ஒரு குடிசைப் போட்டு நான் தனியாக இருக்கத் தொடங்கினேன். எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த முதல் நில ஆக்கிரமிப்பு இதுதான். அந்த அரச மரத்திலிருந்து விழும் காய்ந்த இலைகளை கொளுத்தி தண்ணீர் சுடவைத்துக்கொண்டே வாயில் அரச மரக் குச்சியை வைத்து பல் துலக்கியபடி போவோர், வருவோரிடமெல்லாம் மணிக்கணக்கில் அரசியல் பேசிக்கொண்டிருப்பேன். இதுதான் தினமும் என் காலைப் பணி.

அப்போதெல்லாம் எனக்கு போட்டுக்கொள்ள சட்டையே இருக்காது. வேலைக்குச் செல்லும் அண்ணன், தம்பிகளின் சட்டையை எனக்குத் தரமாட்டார்கள். கட்சிக்காரர்கள் யாராவது வந்தால் அவர்களுடன் சுத்துறது, சின்னச் சின்ன பஞசாயத்து செய்யறதுதான் அப்போதைய பொழப்பு. ஏதாவது பிரச்னைன்னா நான் உடனே ரிக்ஷாவில் ஏறி ஸ்பாட்டுக்குப் போவேன். கையில் சார்மினார் சிகரெட், வெத்தல பாக்கு இதுதான் அந்தக் காலத்துல எனக்கு பிராண்டாக இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் வளர்ந்து தலைவர் வீட்டுக்குப் போறதுக்கு எம்.எஸ்.எல். 1212 என்ற ஃபியட் டாக்சியில போவேன். அதுக்கும் வேற யாராவதுதான் பணம் கொடுக்கணும். அந்த டாக்ஸியின் டிரைவர் கண்ணாயிரத்துக்கு அப்பவே நான் கடன் சொல்லி ஏமாத்துவேன்.

அந்த நேரத்துல வடசென்னையில சிங்காரத்தோட்டம் ஏரியாவுல கட்பீஸ் துணிங்க விக்கிற பிஸினஸ் வளர ஆரம்பிச்சது. அந்தக் காலத்துல செட்டியார்களும் மார்வாடிகளும் அந்த பிஸினஸை செய்தாங்க. அந்த ஏரியாவுக்குப் போனா அங்கிருந்து ஏதாவது வசூலாகும். அதை வைத்துதான் தினமும் வாழ்க்கையை ஓட்டுவேன். அந்தப் பகுதியில இருந்த கோவிந்தன் நாயர் ஓட்டல், கோபாலகிருஷ்ணன் ஓட்டல்ல எனக்கு இலவசமா சோறு போடுவாங்க. அதுக்கு முன்னாடியெல்லாம் ஸ்கூல் பசங்களுக்கும், ஆபீஸருக்கும், வீட்ல வேலை செய்றவங்க கூடையில சாப்பாடு எடுத்துக்கினு போவாங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் மிச்சமிருக்கும் சாப்பாட்டைக் கொண்டு வந்து விப்பாங்க. அந்தச் சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். குறைஞ்ச காசுல கிடைக்கிற அந்த கூடை சாப்பாட்டுக்காக நாங்க சில பேர் காத்துக்கினு இரு ப்போம். கொஞ்ச நாளுக்கப்புறம் இந்த கூடைச் சோறை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நான் மத்தவங்கள கூடைச் சோறுன்னு திட்டுவேன். வெறும் வாய் உதாரிலேயே வடசென்னையை சுத்தி வந்த எனக்கு ‘அஞ்சாநெஞ்சன்’, ‘மாவீரன்’னு கட்சிக்காரங்க போஸ்டர் அடிப்பாங்க. நான் இதுவரைக்கும் கத்தியை கையாலகூட தொட்டதில்லை. பூனை வாலக்கூட அறுத்ததில்லை. ஊர்ல ஏதாவது சின்ன சண்டைன்னாகூட என் கை, கால்கள் எப்படி உதறும்னு எனக்குத்தான் தெரியும்.

சென்னையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளரா இருந்தவர் பாண்டியன் பிறகு, வடசென்னை, தென்சென்னை என பிரித்து தலைவர் ஜேப்பியாரை தென்சென் னையின் மாவட்டச் செயலாளராக்கினார். அதுக்குப்பிறகு 77-ல் பாண்டியனுக்கு சீட் கொடுக்கலைன்னு கோவிச்சுக்கிட்டு அவர் தி.மு.க.வுக்குப் போய்ட்டார். அதன்பிறகு 80-ல் உட்கட்சித் தேர்தல் வந்தது. ஜேப்பியாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப்போனேன். அதே நேரத்துல ராயபுரத்துக்குப் பகுதிச் செயலாளராகிவிட்டேன்.

அப்போ எனக்கு ஆதரவாயிருந்த எல்லா பகுதிச் செயலாளர்களையும் நான் நடுத்தெருவுல விட்டுட்டேன். ஜேப்பியாருக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்னா, ஜேப்பியாரை யார் தேடிப் போனாலும் வாங்க சார், வாங்க தம்பின்னுதான் கூப்பிடுவாரு. என்னைப் பாக்க வந்தவங்க ஆம்பளயா இருந்தா ‘ஓ... இன்னாடா’ன்னுதான் ஆரம்பிப்பேன். பொம்பளயா இருந்தா பின்னால பக்கம் தட்டுவேன். அதேபோல ஜேப்பியார் கட்சிக்காரங்களுக்கு நிறைய பணம் கொடுப்பாரு. என்கிட்ட வந்தா கட் சிக்காரங்கதான் பணம் கொடுக்கணும். நான் இன்னைக்குவரைக்கும் எந்த கட்சிக்காரங்களுக்கும் ஒரு ரூபாய்கூட கொடுத்ததில்லை. இன்னைக்கு எங்கிட்ட இருநூறு கோடி ரூபாய்க்கு மேல சொத்து இருக்கு. ஆனாலும் பஞ்ச வேஷம் போடறதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி. அன்னிக்கு ஐந்து பைசாவுக்காக அரை கிலோமீட்டர் நடந்து வந்த என் தம்பிகிட்டயும் இன்னைக்கு முந்நூறு கோடிக்கு சொத்து இருக்கு.

அதேபோல சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு படிச்சு வளர்ந்த என் அக்கா பையனிடம் இன்னைக்கு ஆயிரம் கோடிக்கு சொத்திருக்கு. தெருவுல சுத்திக்கிட்டிருந்த அவனை பெரிய தொழிலதிபராக்கிட்டேன். அவனை தனியா இந்தத் தொடர்ல உங்ககிட்ட பேசச் சொல்றேன்.

அந்த நேரத்துல அம்மா அரசியலுக்கு வந்தபோது அவங்ககூட நான் இருக்கத் தொடங்கினேன். அவங்க என்னையும் பண்ருட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனையும் எம்.எல்.சி.யாக்க தலைவர்கிட்ட பரிந்துரை செஞ்சாங்க.

அதன்பிறகு எனக்கு பழைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல 11-ம் நம்பர் அறை கிடைச்சது. அதுக்குப்பிறகுதான் நான் புது சட்டையே போட ஆரம்பிச்சேன். என் அண்ணன், தம்பியெல்லாம் என்னைத் தேடிவர ஆரம்பிச்சாங்க.

கட்சிக்கார பொம்பளைங்களும் என்னை தனியா வந்து சந்திப்பாங்க. அவங்க வேலையும் முடியும். என் வேலையும் முடியும்.

அப்புறமா நான் வடசென்னையில வாடகைக்கு ஒரு ஆபீஸை புடிச்சேன். அதன்பிறகு, அந்த ஆபீஸ்தான் எனக்கு எல்லாமும். நான் அங்க தனியாவே இருந்ததில்லை. எப்போதும் பதினாறு, பதினெட்டு வயசுக் பொண்ணுங்க என்கூட இருக்கணும்.

நான் சேர்ல உட்கார்ந்திருப்பேன். பொண்ணுங்க டேபிளுக்கு கீழே போய் உட்கார்ந்துக்குவாங்க. யாராவது திடீர்னு வந்துட்டா. அந்தப் பசங்க எழுந்து ஓடிப்போயிடும். இப்படி நான் பல பேர்கிட்ட மாட்டினு இருக்கேன்.

எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்ததாலும் கட்சிக்காரப் பொம்பளைங்க என்னைச் சுத்தி இருக்கணும், அவங்களை தொடையில தட்றது, கிள்ளறது, சில்மிஷம் செய்யறது தான் எனக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்கலைன்னாலும் எதிர்த்துப் பேசமாட்டாங்க. இப்படியே நான் பொம்பளைங்ககூட சுத்தினு இருந் ததால 48 வயசுலதான் கல்யாணமே ஆச்சு.

அந்த பீரியட்லதான், அதாவது 1986-ன்னு நினைக்கிறேன். ஆர்.கே. நகர்ல இருந்து ஒரு பையன். போலீஸ் ஸ்டேஷன் விவகாரமா என்கிட்ட வந்தான். ‘கிரி’ படத்துல வடிவேலு கணக்கா அவனோட அக்காவ கூட்டினு வந்து எங்கிட்ட வுட்டுட்டு அவன் வேலையை முடிச்சுனு கிளம்பிட்டான். அதுக்குப் பிறகு அவனும் கட்சியில பெரிய அளவுல வளர்ந்துட்டான்.

அதுக்கப்புறம் 91-ல் நடந்த தேர்தல்ல நான் ஜெயிச்சு அஞ்சு வருஷம் சிவப்பு விளக்கு கார்ல சுத்தினேன். அதுல ரெண்டு வருஷம் நெசவு, இரண்டரை வருஷம் கால் நடையையும், கடைசி ஆறு மாசம் சாப்பாட்டையும் கவனிச்சேன். என்கூட ‘எஸ்சார்’ ‘எஸ்சார்’னு சொல்லிக்கினு வந்தவரும் இன்னைக்கு ஐநூறு கோடிக்கு அதிபதியாயிட் டார். என்னை ஜாலியா வச்சுக்க அவருதான் ரொம்ப கஷ்டப்படுவார். அவரும் பேசினால் இன்னும் நிறைய ஜாலியான விஷயங்கள் கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில என் மேலயும் என் அக்கா பையன் மேலேயும் கேஸ் போட்டாங்க. அதுல தண்டனையும் கிடச்சுடுச்சு. ஆனா, நாங்க அப்பீல் செஞ்சு தி.மு.க. ஆட் சியிலயே நிரபராதியாயிட்டோம்.

கடந்த தி.மு.க. ஆட்சியில நான் ஆபீஸ் வச்சிருக்கும் இடத்துக்கு வாடகை தரலைன்னு அந்த இடத்து ஓனர் சி.எம். ஆபீஸுக்கு ஒரு கம்பளைண்ட் கொடுத்தாங்க. ஆட்சி மாறினதும் அத அமுக்கிடலாம்னு பார்த்தா இப்பத்தான் அந்தப் புகார் பரிந்துரை செய்யப்பட்டு விசாரணைக்கு வந்துருக்கு.

இந்த முறையும் நான் சிவப்பு விளக்கு கார்ல போயிருந்தா இன்னும் சில கோடிக்கு சொத்து சேர்த்திருப்பேன். இன்னும் கொஞ்சம் ஜாலியாயிருப்பேன். என்ன செய்யறது? இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும்னு காத்துக்கினு இருக்கேன்...’’

முற்றும்


வாசகர்கள் தங்கள் கருத்துகளின் மூலம் இந்த பிரபலங்களை விமர்சிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறது
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. யார் இந்த பிரபலம்?

Leave a Reply