• Home
  • கமெண்ட்ஸ்
  • TAMIL CHAT
  • New Comments
  • Home
  • உலகம்
  • அரசியல்
  • இலங்கை
  • கருத்துக்கள்
  • சினிமா
    • நடிகை
      • Actress
      • Actors
      • Wallpapers
      • Cine Video
    • சினிமா விமர்சனம்
    • கிசு கிசு
    • சந்திப்பு
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • விஞ்ஞானம்
  • Top Stories
    • Category
    • Category
    • Category
    • Category
You are here : Home »
Showing posts with label இலங்கை. Show all posts


இந்த தீபாவளிக்கு வந்த  திரைப்படங்களில் கருதுக்களுடனும்  ஆவேச வசனங்களுடன் வந்த திரைப்படம் ஏழாம் அறிவு.  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் அதிகமாக தமிழர்களின் நலனுக்காக தமிழர்களின் பழம் பெரும் பெருமைகளை எடுத்து உரைக்கும் விதமாக வெளிவந்து உள்ளது.

பொதி தர்மன் எனும் புத்தருக்கு சமமான ஒரு மனிதர் அதுவும் தமிழர் நமது தமிழகத்தின் காஞ்சி யில் இருந்து சீன தேசம் சென்று தற்காப்பு கலையையும் , மருத்துவத்தையும் அங்கு போதித்தார் என்று ஆரம்பிக்கிறது கதை. கடைசியில் போதி தர்மன் சீனர்களின் அன்பு சூழ்ச்சியால் இறக்க அங்கேயே புதைக்கபடுகிறார்.

அவர் கற்பித்த அந்த கலைகளால் நம் நாட்டிற்க்கு ஆபத்து வருகிறது, அதனை அராய்ச்சியாளர் ஸ்ருதிஹாசான் சர்க்கஸ் கலைஞரும் போதிதர்மனின் பரம்பரயுமான சூர்யா வை வைத்து எப்படி நாட்டின் பேரழிவில் இருந்து காப்பாத்துகிறார் என்பதுதான் மீதி கதை.

இதில் வில்லன் கண்களினாளியே மிரட்டுகிறார் அண்ணல் அதுவே நம்மக்கு போக போக கடுப்பாகிறது, இருந்தாலும் தமிழர்களை பற்றி அதிக இடங்களில் அடிக்கோடு இட்டு நம் தலையில் ஒரு கொட்டு வைக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

யாழ்பாணம் நுலகம் எரிக்கபட்டதின் இழப்பு மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு இழக்க பட்ட துரோகம் இவற்ற்றை எல்லாம் நச் வசங்களில் நம் கன்னங்களில் அறையாத குறையாக நம்மக்கு கூறி உள்ளார் இயக்குனர்.

நாம் இந்த திரைப்படத்தில் இருந்து தெரிந்து கொள்ளள வேண்டியவை :
  • எப்போதும் நாம் நம் தமிழ் இனத்தை காப்பாற்ற தொலை நோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும், எல்லாம் நடேந்தேரிய பிறகு அழுது புலம்பி பயனில்லை.
  • எல்லாவற்றையும் நம்மக்கு சினிமா தான் கற்று தரும் என்பதை நாம் உதறி தள்ள வேண்டும்.
  • இந்த திரைப்படத்தில் கூறி உள்ளது போல் தலை முடியை கொண்டு மரபணு சோதனை மூலமாக ஒருவரின் திறமையை எழுப்ப முடியுமாயின் அதனை கொண்டு தமிழன தலைவர்கள் பலரின் திறைமைகளை வெளிகொனரலாமே, (உங்கள் மனத்திரையில் எந்த தலைவர் தோன்று கிறார் என்று தெரிகிறது ; அப்படி நடந்தால் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே )
  • ஒரு வேலை இது திராவிட (திருட்டு) கட்சியின் ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம், ஆட்சி அதிகாரம் எல்லாம் போன பின்பு திரை மாயங்கள் மூலமாக மக்களிடம் அனுதாபங்களை தேட முயற்சிக்கிறதா என்று ஆராய வேண்டும்.( உதய நிதி அப்படி பண்ணி இருக்க மாட்டார் என்று நம்போவோமாக)
  • அப்படி தமிழர் மீது அக்கறை இருந்தால் ஈழ போராட்டம் பற்றி நேரடி படம் எடுக்க முன்வருவார அவர்

"எழுவோம் தமிழா எழுவோம் - வீழ்ந்ததும் மீண்டு எழுவதற்கே "

வரலாற்றில் சோழப் பேரரசு ஒன்று இன்னும் தோன்றாமல் இருந்த காலம் ,களம் அது ....கி.பி. எட்டாம் நூற்றாண்டு... பல்லவர்கள் தமிழகத்தை முழுவதும் கைகொண்டு ஆட்சி செய்த காலம். சோழர்கள் பல்லவர்களின் சிற்றரசர்களாய் கப்பம் கட்டிக் கொண்டிருந்த காலம்.சோழ மன்னனாக பார்த்திபன் பல்லவன் நரசிம்ம வர்மன் கீழ் கப்பம் கட்டிகொண்டிருந்த காலம்.பெரும் பாரம்பரியத்தில் கரிகாலனின் அரியணையில் சிற்றரசனாக பார்த்திபன்.நெஞ்சு பொறுக்காமல் குமுறிகொண்டிருந்தான் பார்த்திபன்.மிக சக்தி வாய்ந்த பல்லவ பேரரசின் முன்னால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என சோழ மக்கள் முடங்கி கொண்டிருந்தனர்.பர்த்திபனுக்குளோ அடிமை விலங்கை உடைத்து சுதந்திர நாடாக தன் சோழ நாட்டை மாற்ற வேண்டும் என்ற லட்சியம் .மக்களுக்கு மன உறுதியை ஏற்படுத்த பெரு முயற்சி செய்தும் மக்கள் மனதில் விடுதலை தாகம் ,போராட வேண்டும் என்ற எண்ணம் ஆட்கொள்ளவில்லை.என்ன செய்வது என்று சும்மா இருக்கவில்லை பார்த்திபன் .அளப்பரிய தியாகத்தை செய்ய முடிவு செய்தான் .

தன்னுடன் கண்ணுக்கு கண்ணாக இருக்கும் சிறிய படை கொண்டு கடல் போன்ற பல்லவ படையுடன் மோத முடிவு செய்து போர் பிரகடனம் செய்தான்.சோழ மக்கள் எல்லோரும் அரசனுக்கு என்ன ஆயிற்று?பல்லவனோடு போரிட்டு வெல்வது கனவிலும் சாத்தியமில்லையே ! போரில் தோல்வியும் மரணமும் நிச்சயம் ஆயிற்றே ! என புழுங்கினார்.. ஆனால் பார்த்திபன் தான் திட்டமிட்டவாறே தன் சிறிய படையுடன் கடல் போன்ற பெரும் பல்லவ சேனையை எதிர்த்து , போரிட்டு பெரும் சேதத்தை எதிரிக்கு ஏற்படுத்தி ,காலனாக களமாடினான்.அவனின் ஆக்ரோசம் தாங்காமல் பல்லவ மன்னனே நேருக்கு நேர் போர் புரிய வேண்டிய கட்டாயமாயிற்று .மிக உக்கிரமான போர்.சோழ படை வீரர்கள் தாம் வீழ்வது உறுதி என்ற நிலையிலும் போர் களத்தில் எதிரிகளை மிக உக்கிரமாக தாக்கி பலியாகி கொண்டிருந்தனர்.ருத்ர தாண்டவம் ஆடினான் சோழன்.காற்றுப் புக முடியா வண்ணம் வாள் வீசினான். மறவனுக்கு போர் களத்தில் வெற்றியோ அல்லது விழுப்புண்ணால் வீர மரணமோ தவிர்க்க முடியாதது. இறுதியில் விழுப்புண் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான் பார்த்திபன் .

துறவி வேடத்தில் பார்த்திபனுக்கு எதிரே வந்தான் பல்லவன் நரசிம வர்மன். மிகுந்த ஆச்சரியத்துடன் சோழ மன்னனை வியந்தான்.வீரனுக்கு வீரன் செய்யும் அங்கீகாரம் அது.சிறிது நேரம் அமைதி காத்து விட்டு பின் உரையாடலானான் பல்லவன்.காலனை ஒத்த சோழ மன்னா !வெற்றி நிச்சயம் இல்லை , போரில் மரணம் உறுதி என்னும் சூழ்நிலையில் எதற்காக போர் பிரகடனம் செய்து போரிட்டாய் என பார்த்திபனை வினவினான். உன்னை போன்ற ஒரு வீரனை நான் இதுவரை போரில் எதிர்கொள்ளவில்லை. உனக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் .உன் போன்ற வீரனுக்கு மரியாதையை செய்யும் வரம் எனக்கு வேண்டும் என உரைத்தான் பல்லவன் நரசிம்மன் .

காயம்பட்ட நிலையிலும் புன்முறுவலுடன் பெரும் மகிழ்ச்சியுடன் பேச தொடங்கினான் பார்த்திபன்..

துறவியே ! நான் பிறந்த எங்கள் சோழ நாடு தனக்கென்று ஒரு பெரும் வரலாறு உடையது.காவிரியின் பாசத்தால் கழனி நிறைந்த நாடு.கடல் கடந்து போர் வென்ற எல்லாளன்,நரை முடித்து முறை செய்த பெருவீரன் கரிகால பெருவளத்தான் ,தமிழ் விளையாடும் நற்றமிழ் புலவர்கள், நாட்டுக்காக நஞ்சையும் நள பாகமாக விரும்பும் நனி சிறந்த மக்கள் என சீருடையுது. சமீப காலமாக பல்லவ ஆட்சியில் சிற்றரசாக மாறிய பின் மக்களிடம் இருந்த நாட்டுப பற்றும் வீரமும் பொறுப்பும் குறைந்து விட்டது.அவர்களுக்கு விடுதலை வேட்கையை உண்டாக்க பெரு முயற்சி செய்தும் மக்கள் கிளர்ந்து எழவில்லை. ஆகையால் போரில் ஈடுபட்டு என்னையும் என் உயிரினும் மேலான வீரர்களையும் களப் பலி கொடுத்து, என் மீது அளவில்லா அன்புடைய, குடி மக்களிடயே விடுதலை வேட்கையை வார்க்க முடிவு செய்தேன்.என் கண்மணிகளான வீரர்களும் மனம் விரும்பி இந்த வேள்வி தீயில் என்னோடு தோள் கொடுத்து இன்று மாவீரர்களாகி உள்ளனர்.இந்த செய்தி எம் மக்களை எட்டும் போது பெரு வெள்ளம் போன்று உணர்வு கொண்டு விடுதலையை வென்று எடுப்பர் என்றனன் .

ஐயா, தாங்கள் ஏதேனும் செய்வதாய் இருந்தால் என் மக்களிடையே உருவாகும் வேட்கையை உரிய வழியில் வார்த்து எடுத்து எம் சோழ நாடு விடுதலை அடைய உறு துணையாய் இருங்கள் என்று கூறி வீர மரணம் அடைந்தான் ....செய்தி கேட்டு கிளர்ந்தனர் சோழ மக்கள்.....பட்டத்து இளவரசனை பக்குவமாய் வார்த்து பெரு வீரனாக்கி அவன் தலைமையில் விடுதலை அடைந்தனர். பிற்காலத்தில் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டு கடாரம் வரை வென்ற சோழ பேரரசு அந்த பார்த்திபன் மற்றும் வீரர்களின் தியாகத்தால் உருவான அக்கினி குஞ்சு. அந்த தியாகத்துக்கு சோழ மக்கள் தந்த வெகுமதி..தம்மை களத்திலிட்டு தம்மின மானம் காத்த மாவீர்களின் தவம் அது ..

அன்புக்குரிய தமிழீழ மக்களே,

மணலாறு முதல் கிளிநொச்சி வழியாக முள்ளிவாய்க்கால் வரை ஆயும் ஏந்தி களமாடிய போராளிகளும்,ஆயும் ஏந்தாமல் களம் அகலாமல் மௌன புரட்சியே செய்து தம் இன்னுயிர் ஈந்த மக்களும், 1200 ஆண்டுகளுக்கு பின் அந்த பார்த்திபனும் அவனது மாவீரர்களும், செய்த தியாகத்தையே மறுபடியும் செய்து அதே செய்தியையே நமக்கு விட்டு சென்றுள்ளனர்.அவர்கள் நினைத்திருந்தால் களம் விலகி தம் உயிர் காப்பாற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் தங்களை பலியிட்டு நம்மை ஆட்கொண்டுள்ளனர் ....

நாம் என்ன செய்ய போகிறோம்? என்ன செய்ய வேண்டும் ?

ஒரு பார்த்திபன் கனவும் மாவீரகளின் தியாகமும் எப்படி பிற்காலத்தில் பெரும் சோழ பேரரசை நிறுவி வானளாவிய புகழ் அடைந்ததோ ! இந்தியா கண்டமே செய்திராத அளப்பரிய சாதனைகளை இந்துமா கடலில் செய்ததோ ! அதே போன்ற வரலாற்று மறுமலர்ச்சியை படைத்து சுதந்திர தமிழ் ஈழம் படைக்க உறுதி எடுப்போம்.!!! வெற்றி நிச்சயம்..

அமைதி போராட்டங்களின் மூலம் களங்களை புலங்களில் அமைப்போம் !!!! களங்களில் உடையாத "கலங்கலை" புலங்களில் புடம் போட்டு காட்டுவோம் !!!! மக்களை திரட்டி மா வினை செய்வோம் !!! கிஞ்சித்தும் நெஞ்சுருகார் இதயங்களை காட்சிகளால் கவர்ந்து கட்டியம் கூறுவோம் !!!

தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்...

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது!

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது!

ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்!

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்! இவற்றை முன்னிறுத்தியே தமிழர்களம்உருவாக்கப்பட்டது!

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும்.
யாழ் இனியன் என்ற உணர்ச்சி தமிழனின் உரையை இங்கு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...

8 கோடி தொப்பிள் குடி உறவுகள் ....ஆனால் எவ்வித சங்கும் ஊதாமல் முனகிக்கொண்டு உறங்கியது எப்பிடி/ஏன் ? உறவுகள் என்பது மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்த கேடயம். ஆனால் அது பயன்படுத்த தெரிந்தனுக்கு மட்டுமே பலன் தரும் ஆயுதம்.மற்றவருக்கு வெறும் போலி அணிகலன் மட்டுமே. ஈழ தமிழர் விடயத்தில் நடந்ததும் அதுவே... லண்டன்,பாரிஸ்,கனடா,வாசிங்டன் எல்லாம் தெருக்கள் ஈழ தமிழர்களால் முற்றுகையிடப்பட்டு இருந்த காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் வாகனங்களின் இரைச்சல் மட்டுமே நிறைந்திருதது..சுவுர்களில் எல்லாம் திரைப்பட காட்சிகள்..தேர்தல் கூத்துகள்...ஏன் ! மானுடம் இங்கு தழைக்கவில்லை..கொள்ளை கொள்ளையாய் என் மக்களை சிங்களவனின் கொத்து குண்டுகள் பதம் பார்த்தன..பிஞ்சு குழந்தைகள் பார்த்த அந்த பார்வைகள் நெஞ்சை அறுத்து ருத்ர தாண்டவம் ஆட செயதிறுக்க வேண்டிய வேளையில், "தங்க காசு மழை, MAANADA MAYILADA " பார்த்து கொண்டு தேர்தலுக்கு வோட்டுக்கான லஞ்சம் வரவில்லையே என்ற சோகம் தமிழர் நெஞ்சை கொண்டிருந்தது.....எங்கே போனது மனித நேயம் ? .பாரில் நேயம் இருந்தால் தானே போவதற்கு!..பரந்தாமனின் இந்த "பாரில்" எங்கும் இல்லை மனிதம்.....'வாழும் போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா !!!..பிறருக்காக செந்நீரும் பிறருக்காக கண்ணீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் ! மனிதன் ! ' என்பதெல்லாம் ஏட்டு சுரக்காய் ஆகி பல யுகங்களாகி விட்டது !!! !!!!

ஆனாலும் இன்னும் ஓர் ஊர் மந்திரம் உலகை கட்டி வைத்திருக்கிறது !! அது தான் ஐரோப்பா வீதிகளில் ஈழ தமிழர்களை தரை இறக்கியது !!!! தமிழகத்தில் தமிழர்களை திரைக்கு பின்னே போட்டது !!!! அது என்ன ?
தமிழில் ஓர் பழ மொழி !!!! கூடாத உறவும் குலையாத சோறும் குடலுக்கு ஆகாது !!! ஆதாவது கூடிகொள்ளும் திருமண உறவு கொள்ளாத சொந்தங்கள் பசியாற்றாது ...8 கோடி தமிழர்களை கொண்ட தமிழகத்துடன் ஒரு லட்சம் திருமண உறவுகள் ஈழம் கொண்டிருந்தால் தமிழகம் உலகையே உலுக்கி இருக்கும்..அதன் கந்தக குரல் காற்றை கிழித்து சிங்களத்தை சீரலிதிருக்கும் !!! ஒவ்வொரு ஈழத்தமிழன் சாவும் எங்கு பல நூறு குடும்பங்களை சுட்டிருக்கும்..தமிழகமே அந்த "இழவு" ஆற்றாமையில் தீரா கோபத்தை கக்கியிருக்கும்...அவை பல ஆயிரம் தமிழ் குடும்பங்களை தெருவில் இறக்கி சில கோடி தமிழர்கள் இந்தியாவின் சிண்டைப்பிடித்து சிக்கெடுக்க வைத்திருக்கும்...அந்தோ பரிதாபம் !!சில நூறு ஈழ தமிழர் கூட தமிழகத்தில் திருமண உறவு கொள்ளவில்லையே ...!!! அதனால் தான், தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற வரிகளே உறங்கி போனது!!!

என் அருமை தமிழர்களே !!!
நீங்கள் ஈழ ,மலேசியா,சிங்கபோரே,மொரிசியஸ்,கனேடிய நாடுகளில் வாழ்ந்தாலும் உங்களின் பாதுகாப்பு ,உரிமை குரல் ,ஆற்றாமை காக்கும் அருமருந்து 8கோடி தமிழர் வாழும் தாய் தமிழகத்துடன் நீங்கள் கொள்ளும் இரத்த கலப்புடைய திருமண உறவிலேயே உள்ளது என்னும் எதார்த்த உண்மையை புரிந்து கொள்வீர்கள்!!! கொள்ளாத உறவும் பேணாத சொந்தமும் என்றும் நிலைபதில்லை !!! வெறும் தொப்புள் கொடி உறவு மட்டுமே பலமாகாது!! தாலி கொடி உறவையும் தழைக்க வைத்து வேரோடுங்கள் !!! வென்று எடுங்கள் வெற்றி உலகை!!! தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!!ஈழ தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!! உலக தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!!ஒன்றுபட்ட தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!தொப்புள் கொடி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!தாலி கொடிதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!
சேனல் 4 வெளியிட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் வெறியாட்டம்...

நெஞ்சை உலுக்கும் வீடியோ இது, தயவு செய்து இதயம் பலகீனமானோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனை பார்க்க வேண்டாம்...

சேனல் 4 தொலைக்காட்சியால் பதிவு செய்து வெளியிடப்பட்ட ஆவணப்படம் இது ஈழம் மக்களின் இறுதி நாட்களில் அவர்களின் ரத்த வாழ்கை இதில் உள்ளது மேலே உள்ள வீடியோவை விட இது கொடூரமாக உள்ளது...

சமிபத்தில் முடிந்த உலககோப்பை (ICC WORLD CUP 2011) கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் உப்புல்  தரங்கா ஊக்க மருந்து உட்கொண்டார் என தெரிய வந்துள்ளது, இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒத்துக்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் (SRI LANKA CRICKET TEAM) தொடக்க வீரர் உப்புல் தரங்கா தான் சமீபத்தில் விளையாடிய உலகக்கோப்பை தொடரின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை  உட்கொண்டு விளையாடி தனது அணியை சில முக்கிய போட்டிகளில் வென்றும் கொடுத்துள்ளார், அதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதமும், மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதமும் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார், பிறகு அந்த வெற்றியின் மூலம் தான் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது எனபது குறிப்பிட தக்கது, இதனை இப்போது ஐ சி சி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இப்படி கள்ளத்தனமாக இலங்கை அணி உலகக்கோப்பையில் விளையாடி உள்ளது நிறுபனமாகி உள்ளது, இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் இவருடன் சேர்ந்து மற்றும் ஒரு வீரருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது, இவரை மட்டும் International Cricket Counsil விசாரிக்கிறது. 


கொழும்பு: உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காணச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என இலங்கை அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் இணையதளங்களில் இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண மும்பை சென்ற ராஜபக்சே, தன்னுடன் வந்திருந்தவர்களுக்கு 30 இருக்கைகளை கேட்டிருந்ததாகவும், அவருக்கு 10 இருக்கைகளே வழங்கப்பட்டதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டியைக் காணச் சென்ற அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு நாட்டின் அதிபர் என்ற வகையில் இந்தியாவில் உரிய மரியாதைகள் கிடைக்கவில்லை என இந்தியாவுக்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபெக்கா சமரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை சந்திக்க ராஜபக்சேஅனுமதி கோரியிருந்தபோதும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையாம். மேலும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் புகைப்படம் எடுக்கவும் ராஜபக்சேவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா சென்ற அதிபர் ராஜபட்ச உரியமுறையில் கவனிக்கப்படாதது குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக இந்தியாவுக்கான தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

அழையாத விருந்தாளி...

இதற்கிடையே ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை குறித்து இந்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்ததனால் அவருக்கு உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டதாக இலங்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு ஏதுமின்றி தனிப்பட்டரீதியில் இந்தியா வந்ததன் காரணமாகவே அவருக்கு அரசு மரியாதை தரப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ரத்னாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொழும்பு: வடக்கில் நிலைகொண்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார செயலில் ஈடுபட்டார் கருணா. அதேபோல பல்வேறு சட்டவிரோத கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் என அனைத்து சட்ட விரோத செயல்களையும் அவர் செய்தார் என்று கருணாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2007-ம் ஆண்டு மே 17ம் தேதி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த சில கேபிள்களை அனுப்பி வைத்துள்ளது. அவற்றை நேற்று வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

அதில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து துரத்தப்பட்டு தனி போராளி குழுவை உருவாக்கி பின்னர் ராஜபக்சே அரசுடன் இணைந்து கொண்டு கருங்காலியாக மாறிய கருணாவின் பயங்கர சுயரூபத்தை அதுவெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போனதும், ராணுவத்துக்கு எந்த அளவு கேவலமான வேலைகளைச் செய்துள்ளார் கருணா என்பதையும் அது வெளிக்காட்டியுள்ளது. தற்போது கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலைய கருணாவுக்கும் அவரது குழுவினருக்கும் உத்தரவிட்டார் கோத்தபயா ராஜபக்சே.

இதே வேலையை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி குழுவுக்கும் அவர் பணித்திருந்தார். இருவரும் சேர்ந்து தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்து கோத்தபயாவுக்கு கொடுத்து வந்தனர்.

தற்போது அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலகட்டத்தில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பலவேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர் வைத்திருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப்பயம் காரணமாக இந்த பெண்கள் கருணாவின் உத்தரவுக்கு கட்டுப்பட நேரிட்டது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவத் தளபதிகளை அழைத்த கோத்தபயா ராஜபக்சே அங்கு தமிழ் எம்.பிக்கள் (கருணாவும், டக்ளஸும்) செய்துவரும் சில வேலைகளில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தினார். ராணுவத்தின் செயலை சர்வதேச நாடுகள் கண்காணிக்கின்றன. எனவே நம்மால் செய்ய முடியாத சில வேலைகளை இவர்கள் செய்வார்கள். அதில் யாரும் குறுக்கிட வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வேலைகள் என்று இதில் கூறப்பட்டிருப்பது, கடத்தல், படுகொலைகள், பணம் பறித்தல், விபச்சாரம் ஆகியவையாகும்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெகரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தில் கருணாவை மிகப் பெரிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கருணா பல்வேறு வகையான குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். பணம் பறிப்பது, ஆட்களை கடத்தி மிரட்டுவது, சட்டவிரோதமான கொலைகளில் ஈடுபடுவது, ராணுவத்தினருக்குத் தேவையான பெண்களை சப்ளை செய்வது ஆகியவை இதில் அடக்கம்.

ராணுவத்தினருக்கு எப்போதெல்லாம் பெண்கள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அனுப்பி வைத்தவர் கருணா.

2006ம் ஆண்டில் அரசின் ஆதரவு காரணமாக, கருணா, டக்ளஸ் ஆகியோரின் தலைமையில் இயங்கி வந்த குழுக்கள் மிகப் பெரிய அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டன. கருணா, டக்ளஸ் கும்பல்கள், குழந்தைகள் கடத்தலிலும் கூட ஈடுபட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுவோரை கடத்தி வரும் பொறுப்பையும் கருணா, டக்ளஸிடம் இலங்கை அரசு கொடுத்திருந்தது. இந்தக் குழுக்களுடன் தங்களுக்குத் தொடர்பு இல்லை ராணுவம் கூறியபோதும், அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மை.

அரசின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததால் எம்.பிக்களுக்கான சம்பளத்தை ரத்து செய்திருந்தார் அதிபர் ராஜபக்சே. இதற்குப் பதிலாக கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்டவற்றில் கருணா, டக்ளஸ் ஈடுபடுவதை அவர் தடுக்கவில்லை. மாறாக மறைமுகமாக ஆதரித்தார்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்திய வம்சாவளி தமிழர்களையும் கூட மிரட்டிப் பணம் பறித்து வந்தனர் டக்ளஸ், கருணா கும்பல்கள் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Older Posts Home
Tweet
  • Recent Posts
  • Comments

Google Links

  • Hollywood Actress Hot Pictures
    Hollywood Actress Kate Upton Bikini Pictures
  • Hot Pictures Of Actress College Girls Aunties
    Amisha Patel Latest Pictures Collection
  • Hot Actress Navel Pictures
    Hottest Actress Swathi Verma Hot Navel Show
  • Actress Wall Papers, Hot Actress Pictures
    Hot Mallu Actress Navel Show in Saree Pictures
  • All Cinema Gallery Duniya
    Sonali Bindre3
  • All Movies Free Download
    Prince Of Persia - 2011 Tamil Dubbed Hollywood Movie Download
  • Free Movies Online
  • Hot TV Serial Actress Pictures

Followers

Advertisement

Daily Video

Page

  • Home
  • கமெண்ட்ஸ்
  • TAMIL CHAT
  • New Comments

Photos on Flickr

2010 Tamil Duniya News. All rights reserved.
Designed by Duniya