இந்த தீபாவளிக்கு வந்த திரைப்படங்களில் கருதுக்களுடனும் ஆவேச வசனங்களுடன் வந்த திரைப்படம் ஏழாம் அறிவு. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் அதிகமாக தமிழர்களின் நலனுக்காக தமிழர்களின் பழம் பெரும் பெருமைகளை எடுத்து உரைக்கும் விதமாக வெளிவந்து உள்ளது.
பொதி தர்மன் எனும் புத்தருக்கு சமமான ஒரு மனிதர் அதுவும் தமிழர் நமது தமிழகத்தின் காஞ்சி யில் இருந்து சீன தேசம் சென்று தற்காப்பு கலையையும் , மருத்துவத்தையும் அங்கு போதித்தார் என்று ஆரம்பிக்கிறது கதை. கடைசியில் போதி தர்மன் சீனர்களின் அன்பு சூழ்ச்சியால் இறக்க அங்கேயே புதைக்கபடுகிறார்.
அவர் கற்பித்த அந்த கலைகளால் நம் நாட்டிற்க்கு ஆபத்து வருகிறது, அதனை அராய்ச்சியாளர் ஸ்ருதிஹாசான் சர்க்கஸ் கலைஞரும் போதிதர்மனின் பரம்பரயுமான சூர்யா வை வைத்து எப்படி நாட்டின் பேரழிவில் இருந்து காப்பாத்துகிறார் என்பதுதான் மீதி கதை.
இதில் வில்லன் கண்களினாளியே மிரட்டுகிறார் அண்ணல் அதுவே நம்மக்கு போக போக கடுப்பாகிறது, இருந்தாலும் தமிழர்களை பற்றி அதிக இடங்களில் அடிக்கோடு இட்டு நம் தலையில் ஒரு கொட்டு வைக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
யாழ்பாணம் நுலகம் எரிக்கபட்டதின் இழப்பு மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு இழக்க பட்ட துரோகம் இவற்ற்றை எல்லாம் நச் வசங்களில் நம் கன்னங்களில் அறையாத குறையாக நம்மக்கு கூறி உள்ளார் இயக்குனர்.
நாம் இந்த திரைப்படத்தில் இருந்து தெரிந்து கொள்ளள வேண்டியவை :
- எப்போதும் நாம் நம் தமிழ் இனத்தை காப்பாற்ற தொலை நோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும், எல்லாம் நடேந்தேரிய பிறகு அழுது புலம்பி பயனில்லை.
- எல்லாவற்றையும் நம்மக்கு சினிமா தான் கற்று தரும் என்பதை நாம் உதறி தள்ள வேண்டும்.
- இந்த திரைப்படத்தில் கூறி உள்ளது போல் தலை முடியை கொண்டு மரபணு சோதனை மூலமாக ஒருவரின் திறமையை எழுப்ப முடியுமாயின் அதனை கொண்டு தமிழன தலைவர்கள் பலரின் திறைமைகளை வெளிகொனரலாமே, (உங்கள் மனத்திரையில் எந்த தலைவர் தோன்று கிறார் என்று தெரிகிறது ; அப்படி நடந்தால் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே )
- ஒரு வேலை இது திராவிட (திருட்டு) கட்சியின் ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம், ஆட்சி அதிகாரம் எல்லாம் போன பின்பு திரை மாயங்கள் மூலமாக மக்களிடம் அனுதாபங்களை தேட முயற்சிக்கிறதா என்று ஆராய வேண்டும்.( உதய நிதி அப்படி பண்ணி இருக்க மாட்டார் என்று நம்போவோமாக)
- அப்படி தமிழர் மீது அக்கறை இருந்தால் ஈழ போராட்டம் பற்றி நேரடி படம் எடுக்க முன்வருவார அவர்
"எழுவோம் தமிழா எழுவோம் - வீழ்ந்ததும் மீண்டு எழுவதற்கே "

நடிகர் : விமல்
நடிகை : சனுஷா
இயக்குனர் : சுரேஷ்
திருடன் கையிலேயே கல்லா பெட்டியின் சாவியை கொடுத்த கதையாக, ஊரைச்சுற்றி கடனை வாங்கிவிட்டு எத்தனாகவும், எமகாதகனாகவும், எகத்தாளமாகவும் பேசித்திரியும் ஹீரோ விமல் கையில், அந்த ஊர் வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களை வலை வீசி பிடிக்கும் வேலை வந்து சேருகிறது.
விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அவரை மிரட்டி திரிந்தவர்களையெல்லாம், விமல் மிரட்டியும், விரட்டியும் பிடிக்க வேண்டிய சூழல்! அதனூடே தாதா மாமனுக்கு தாரமாக வேண்டிய சனுஷாவுடன் காதல்!! இரண்டிலும் எத்தன் விமல் எப்படி வெற்றி பெறுகிறார்...? என்பது மீதிக்கதை!
எத்தனாக விமல் செம ஜித்தன் என சொல்லும் வகையில் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். காலை 4 மணிக்கு கடன்காரர்களுக்கு பயந்து எழுந்து ஓடுவதும், ஒவ்வொரு இந்தியனும் 30ஆயிரம் கடனில் தான் இருக்கிறான். இந்தியாவே கடனில்தான் இருக்கிறது..., டாடா - அம்பானி கூட கடன் வாங்கிதான் பிஸினஸ் செய்கிறார்கள் என்று லாஜிக் பேசுவதுமாக படம் முழுக்க பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர்!நாயகி சனுஷா செல்வி பாத்திரத்தில், தந்தையை கொன்ற தாத மாமனின் தாலிக்கு தலை கொடுக்க பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளில் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.
வில்லன் சரோஜித் தாதா பாண்டியன் பாத்திரத்தில் சக்கைபோடு போட்டிருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு என எண்ணும்படியாக அமைந்துள்ளது இவர் பாத்திரம். விமலின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக மாஜி நாயகி பிரகதி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி நந்தா சரவணன் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்தாஜ்நூரின் தன்னிகரில்லா இசையும், கே.பி.ஆர்.ரமேஷின் ஒப்பற்ற ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் பக்குவமான படத்தொகுப்பும், எல்.சுரேஷின் வாள்முனை போன்ற வீரிய வசனங்களும், இயல்பான இயக்கமும் எத்தனின் ப்ளஸ் என்று சொல்லலாம்.
மொத்தத்தில் "எத்தன்" - "ஜித்தன்", நிச்சயம் ரசிகர்களை ஆக்குவான் "பித்தன்"
நடிகர் : ஆதி
நடிகை : மீரா நந்தன்
இயக்குனர் :ராஜ மித்ரன்
மிருகம், ஈரம் படங்களை அடுத்து ஆதி கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் ஆக்ஷன் படம்தான் அய்யனார்.
முதல்காட்சியிலேயே ஒரு கொலையை மறைக்க முயற்சிக்கிறார் ஹீரோ ஆதி. அது யார்? ஏன்? ஏதற்கு? என்பதை விளக்க விரிகிறது ப்ளாஸ்பேக். கதைப்படி கிராமத்தில் மகழ்ச்சியாக வாழும் ஜெயபிரகாஷ் - அனுபமா தம்பதியினர் குடும்பத்திற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் மூத்தவர் ஹீரோ ஆதிக்கும், அவரது தம்பிக்கும் ஏழாம் பொருத்தம். ஆதி ஏதாவது தவறு செய்தால் அதை அப்பா - அம்மாவிடம் உடனடியாக போட்டுக் கொடுக்கும் பொறுப்பை சின்னவர் விஷ்ணு பிரியன் செவ்வனே செய்து வருகிறார். இது ஆதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அண்ணன் - தம்பி இருவருக்குமிடையே பகை, நீர்பூத்த நெருப்பாக வளர்கிறது. வளர்ந்து பெரியவன் ஆனதும் மாநில அளவில் பெரிய வாலிபால் விளையாட்டு வீரரான ஆதி, அத்திறமை மூலம் மத்திய அரசில் பணிக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று காத்திருக்கிறார். கூடவே ஒரு ஒரு மகளிர் கல்லூரிக்கு வாலிபால் கோச்சாக போகுமிடத்தில் வாலிபாலில் சாதிக்கத் துடிக்கும் ஹீரோயின் மீரா நந்தன் மீது காதல் கொள்கிறார்.
காதல், காத்திருப்பு என காலம் தள்ளும் ஆதி கையில் காசு பணம் இல்லாமல் திண்டாட, சென்னையில் டி.வி. சேனல் ஒன்றில் கேமரா மேனாக கைநிறைய சம்பாதிக்கும் தம்பி விஷ்ணுபிரியன், அண்ணன் ஆதியை அடுத்தடுத்து அவமானப்படுத்துகிறார். இச்சமயத்தில் ஆதி எண்ணிய படியே விளையாட்டு வீரர் கோட்டாவில் அவருக்கு மத்திய அரசு வேலை ஒன்று கிடைக்க குடும்பமே சந்தோஷத்தில் திகைக்கிறது. இந்த சமயத்தில் தம்பியின் அவசர அழைப்பை ஏற்று சென்னை வரும் ஆதி, தம்பியை பார்க்க கூடாத நிலையில் பார்க்கிறார். அதனால் கடும் கோபம் கொள்கிறார். அதன் விளைவு என்ன? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், ப்ளாஸ்பேக்கிற்குள், ப்ளாஸ்பேக் வைத்து சொல்கிறது அய்யனார் படத்தின் மீதிக்கதை!
பிரபாகர் அலைஸ் அய்யரனாராக ஆதி பிரமாதமாக நடித்திருக்கிறார். சொந்த தம்பியையே ஹீரோ ஆதி கொன்றிருக்க மாட்டார் என்பது முதல் காட்சியிலேயே புரிந்துவிட்டாலும், ஆதியின் தம்பியை கொன்றது யார்? எவர்? என்பதை நோக்கி கதை செல்லும் வேகத்தில் எந்த குறையும் வைக்காமல் காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் மிளிர்கிறார்.
சந்தானம், எஸ்.எஸ்.குமரன் உள்ளிட்ட காமெடி நண்பர்களுடன் சொந்த வீட்டிலேயே சோற்றுக்கு அலையும் ஆதி, வாலிபால் ப்ளேயராக, மீரா நந்தனின் காதலராக, அப்பாவிற்கு பிடிக்காத, அம்மா செல்லமாக, தம்பியை கொன்றவர்களை பழிவாங்க புறப்படும் இடத்தில் ஆக்ஷன் ஹீரோவாக என்று படிப்படியாக ரசிகர்களின் மனதை பக்காவாக கொள்ளையடித்து விடுகிறார்.
இறந்துபோன் அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற போராடும் மீரா நந்தன் ஆதியுடனான காதல் காட்சிகளில் கைதேர்ந்த நடிப்பை வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சிக்கு மட்டும் பஞ்சம் வைத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஆதியுடன் சந்தானம் அண்ட் கோவினர் பண்ணும் காமெடி, அப்பா ஜெபிரகாஷின் அதட்டல் உருட்டல், அம்மா அனுபமாவின் பாசப்போராட்டம், தம்பி விஷ்ணுபிரியனின் திக்குவாய் நடிப்பு எல்லாவற்றையும் மறக்கடித்து மழுங்கடித்து விடுகிறது. மகாதேவன் - ரவிகலே உள்ளிட்ட வில்லன் கோஷ்டியினரின் அரசியல் அராஜகமும், தமனின் இனிய இசையும், ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.
அரிவாளும் கையுமாக அலையும் கமர்ஷியல் அய்யனார், வசூலில் மெய்யனார்!

