படபிடிப்பில் ஓவியா மயக்கம்! டைரக்டர் பதற்றம்!

நடிகை ஓவியா சூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. படத்தில் அம்மணியின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பில் வெளுத்து வாங்கிய ஓவியா, அந்த படத்தை தொடர்ந்து கமல்ஹானின் மன்மதன் அம்பு படத்தில் நடித்தார். கமல்ஹாசன் படம், பெரிய பேனர் என்றெல்லாம் பில்ட்அப் கொடுத்த ஓவியா, படம் ரீலிஸ் ஆனபோது ரொம்பவே அப்செட் ஆனார். காரணம் அம்மணி படத்தில் வந்ததே இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும்தான். அதுவும் பஜ்ஜி சாப்டுறியேளா...? என்ற டயலாக்குடன்!

இதற்கிடையில் முத்துக்கு முத்தாக படத்தில் கமிட் ஆன ஓவியா, இரவு பகலாக நடக்கும் சூட்டிங்கில் உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறார். களவாணி போலவே இந்த படமும் கிராமத்து சப்ஜெக்ட் என்பதால் கண்டிப்பாக நல்ல பல வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் கடுமையாக உழைத்து வரும் ஓவியா, டைரக்டர் கேட்ட தேதிகளை ஒதுக்கி நடித்துக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த சூட்டிங்கில் பங்கேற்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே பதட்டமடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு ஓவியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஓய்வில்லாமல் உழைத்ததான் மயக்கம் ஏற்பட்டு விட்டதாகவும், ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும், என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அம்மணி அடம்பிடித்து படப்பிடப்பு தளத்திற்கு வந்து, ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு விட்டுத்தான் ஓய்வெடுக்கச் சென்றாராம். அந்த அளவுக்கு ஓவியா சின்சியரான நடிகை என்கிறார் படத்தின் டைரக்டர் ராசுமதுரவன்.
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. கருத்து சாமி
    15 March 2011 at 9:56 pm

    அந்த ஸ்ப்ரே மேட்டர் தெரிந்தா சொல்லுங்கள்

Leave a Reply