பாலிவுட்டில் கோட்டை விட்ட அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா கூடுதல் சம்பளம் கேட்டதால் இந்திப்பட வாய்ப்பை இழந்துள்ளார். தமிழி்ல் 1 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டுப் பெறும் அனுஷ்காவுக்கு இந்திப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது வருகின்றன. தமிழில் அவர் நடித்த சிங்கம் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யதிட்டமிட்ட டைரக்டர் ரோஹித் ஷெட்டி, இந்தியிலும் அனுஷ்காவையே நாயகியாக போட நினைத்தார். இதற்காக அனுஷ்காவை அழைத்து பேசினார் ரோஹித். அப்போது ரூ.2 கோடி சம்பளம் கேட்டதுடன் சிலபல கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார் அனுஷ்கா.

இதனால் அனுஷ்கா வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த வேறு நடிகையை தே‌ட ஆரம்பித்தார். இப்போது அனுஷ்காவின் வாய்ப்பை தட்டிப் பறித்திருப்பவர் காஜல் அகர்வால். கண்ணழகி காஜல், ரோஹித்தின் பட்ஜெட்டுக்கும், கட்டுப்பாடுக்கும் ஒத்து வந்ததால் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விட்டார்களாம். விரைவில் சூட்டிங் ஆரம்பமாகிறது.
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply