ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள மகள் கனிமொழியை பார்க்க முன்னாள் முதல்வர் மு . கருணாநிதி நேற்று டெல்லி சென்றார். கனிமொழியை நேரில் சந்தித்த கருணாநிதி "பயப்படவேண்டாம்" என்று ஆறுதல் சொன்னதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் ஜாமின் மனுவை. கடந்த வெள்ளியன்று, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி நிராகரித்ததால்.அன்று மாலையே. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டில்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.கோர்ட்டில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின், கனிமொழியின் தந்தை கருணாநிதி, எப்போது டில்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே, கருணாநிதி, டில்லிக்கு கிளம்பலாம் என, முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம், நிருபர்களிடம் பேசிய அவர், "தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை' என்று கூறினார்.அடுத்த நாள், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது, தி.மு.க., - காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.
25 May 2011 at 5:34 am
ராஜா இருக்கும் இடம் தான் இந்த ரோஜாவுக்கு சுவர்க்கம் !! நீங்கள் பயபடாதிர்கள் அப்பா
7 June 2011 at 5:53 am
good comment
14 July 2011 at 3:36 am
ஏன் பயப்பட வேண்டும், வாசகர் சொன்னது போல், ராஜா உள்ளார் , சல்லாபிக்க வேண்டியது தானே வேணும் பொழுது