யாழ் இனியன் என்ற உணர்ச்சி தமிழனின் உரையை இங்கு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...
8 கோடி தொப்பிள் குடி உறவுகள் ....ஆனால் எவ்வித சங்கும் ஊதாமல் முனகிக்கொண்டு உறங்கியது எப்பிடி/ஏன் ? உறவுகள் என்பது மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்த கேடயம். ஆனால் அது பயன்படுத்த தெரிந்தனுக்கு மட்டுமே பலன் தரும் ஆயுதம்.மற்றவருக்கு வெறும் போலி அணிகலன் மட்டுமே. ஈழ தமிழர் விடயத்தில் நடந்ததும் அதுவே... லண்டன்,பாரிஸ்,கனடா,வாசிங்டன் எல்லாம் தெருக்கள் ஈழ தமிழர்களால் முற்றுகையிடப்பட்டு இருந்த காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் வாகனங்களின் இரைச்சல் மட்டுமே நிறைந்திருதது..சுவுர்களில் எல்லாம் திரைப்பட காட்சிகள்..தேர்தல் கூத்துகள்...ஏன் ! மானுடம் இங்கு தழைக்கவில்லை..கொள்ளை கொள்ளையாய் என் மக்களை சிங்களவனின் கொத்து குண்டுகள் பதம் பார்த்தன..பிஞ்சு குழந்தைகள் பார்த்த அந்த பார்வைகள் நெஞ்சை அறுத்து ருத்ர தாண்டவம் ஆட செயதிறுக்க வேண்டிய வேளையில், "தங்க காசு மழை, MAANADA MAYILADA " பார்த்து கொண்டு தேர்தலுக்கு வோட்டுக்கான லஞ்சம் வரவில்லையே என்ற சோகம் தமிழர் நெஞ்சை கொண்டிருந்தது.....எங்கே போனது மனித நேயம் ? .பாரில் நேயம் இருந்தால் தானே போவதற்கு!..பரந்தாமனின் இந்த "பாரில்" எங்கும் இல்லை மனிதம்.....'வாழும் போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா !!!..பிறருக்காக செந்நீரும் பிறருக்காக கண்ணீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் ! மனிதன் ! ' என்பதெல்லாம் ஏட்டு சுரக்காய் ஆகி பல யுகங்களாகி விட்டது !!! !!!!
ஆனாலும் இன்னும் ஓர் ஊர் மந்திரம் உலகை கட்டி வைத்திருக்கிறது !! அது தான் ஐரோப்பா வீதிகளில் ஈழ தமிழர்களை தரை இறக்கியது !!!! தமிழகத்தில் தமிழர்களை திரைக்கு பின்னே போட்டது !!!! அது என்ன ?
தமிழில் ஓர் பழ மொழி !!!! கூடாத உறவும் குலையாத சோறும் குடலுக்கு ஆகாது !!! ஆதாவது கூடிகொள்ளும் திருமண உறவு கொள்ளாத சொந்தங்கள் பசியாற்றாது ...8 கோடி தமிழர்களை கொண்ட தமிழகத்துடன் ஒரு லட்சம் திருமண உறவுகள் ஈழம் கொண்டிருந்தால் தமிழகம் உலகையே உலுக்கி இருக்கும்..அதன் கந்தக குரல் காற்றை கிழித்து சிங்களத்தை சீரலிதிருக்கும் !!! ஒவ்வொரு ஈழத்தமிழன் சாவும் எங்கு பல நூறு குடும்பங்களை சுட்டிருக்கும்..தமிழகமே அந்த "இழவு" ஆற்றாமையில் தீரா கோபத்தை கக்கியிருக்கும்...அவை பல ஆயிரம் தமிழ் குடும்பங்களை தெருவில் இறக்கி சில கோடி தமிழர்கள் இந்தியாவின் சிண்டைப்பிடித்து சிக்கெடுக்க வைத்திருக்கும்...அந்தோ பரிதாபம் !!சில நூறு ஈழ தமிழர் கூட தமிழகத்தில் திருமண உறவு கொள்ளவில்லையே ...!!! அதனால் தான், தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற வரிகளே உறங்கி போனது!!!
என் அருமை தமிழர்களே !!!
நீங்கள் ஈழ ,மலேசியா,சிங்கபோரே,மொரிசியஸ்,கனேடிய நாடுகளில் வாழ்ந்தாலும் உங்களின் பாதுகாப்பு ,உரிமை குரல் ,ஆற்றாமை காக்கும் அருமருந்து 8கோடி தமிழர் வாழும் தாய் தமிழகத்துடன் நீங்கள் கொள்ளும் இரத்த கலப்புடைய திருமண உறவிலேயே உள்ளது என்னும் எதார்த்த உண்மையை புரிந்து கொள்வீர்கள்!!! கொள்ளாத உறவும் பேணாத சொந்தமும் என்றும் நிலைபதில்லை !!! வெறும் தொப்புள் கொடி உறவு மட்டுமே பலமாகாது!! தாலி கொடி உறவையும் தழைக்க வைத்து வேரோடுங்கள் !!! வென்று எடுங்கள் வெற்றி உலகை!!! தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!!ஈழ தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!! உலக தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!!ஒன்றுபட்ட தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!தொப்புள் கொடி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!தாலி கொடிதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!
ஈழம் எரிந்தபோது ஏன் தமிழகம் செயலற்றது ? ஓர் கசக்கும் உண்மை ?
4 comments
Leave a Reply
12 July 2011 at 11:09 am
கருணாநிதி செத்து ஒழியட்டும் எல்லாம் அந்த பர நாய் செய்த வேலை
12 July 2011 at 11:12 am
http://www.youtube.com/user/sunkudumbam#p/u/0/70A_Ru_biGo
கருணாநிதி நாய் மேல் இத்தனை வேதனை பாருங்கள் அந்த வீடியோக்களை
22 July 2011 at 11:38 pm
தெரியாமல் செய்த தவறு என்றால் அது விடுதலைப்புலிகல் தவறு தான் .ஒவ்வொரு முறையும் உதவிய நண்பர்கள் இனி உதவ முடியாது என அறியவில்லை . அதுதான்...Selvaraj
23 July 2011 at 12:28 am
மக்களே, நீங்கள் நினைப்பது போல் இல்லை. நம் தமிழ் நாட்டில் இலங்கையில் வாழும் தமிழர்களை மறந்தோ மறுத்தோ யாரும் இருக்கவில்லை. கண்கள் அழுதிருந்தாலும் கூட குறைவாகத்தான் இருந்திருக்கும், இங்கு இதயம் அழுகாத தமிழர்களே இல்லை. நம்பி வந்த பலரையும் வாழவைத்தே பேரெடுத்த தமிழகம் சொந்த தமிழர்களை மறக்கவே இல்லை. மாறாக தமிழர்களை மறந்தது இந்திய அரசுதான். கட்டாயமாக தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய எந்த ஒரு சிறு உதவியும் இந்திய அரசு இதுவரை செய்யவே இல்லை. இது வெளிப்படையான உண்மையே. ஒரு சீக்கியர் அடிபட்டால், ஒரு வட இந்தியர் அடிபட்டால் கொதித்தெழும் நம் இந்திய அரசு தமிழர் விசயத்தில் அக்கறை இன்றி இருப்பது மட்டும் அல்ல, சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, உதவி செய்வது போன்ற செயல்கள் வெந்து கிடக்கும் புண்ணில் வேல் பேசுவது போன்றது மட்டுமல்ல வெட்டுப்பட்டுக்கிடக்கும் எம் மக்களின் குருதியையே உறுஞ்சி குடிக்கும் ரத்தக்காட்டேரிக்கு நிகராகும். அரசே இந்திய அரசே செய் எதாவது செய் எங்கோ இருக்கும் அமெரிக்காவே கண்டனம் செய்த பிறகும் நீ பேசாமல் இருப்பது வெட்கபடவேண்டிய விஷயம். இனி என் மக்களுக்காக யார் பேசுவது? கடவுளே, இயற்கையே, உம்மிடமே இந்த மக்களை விட்டுவிடுகிறோம் நீ பார்த்து காப்பாற்று அல்லது அவர்களை பேசாமல் எங்களிடமே விட்டு விடு நாங்கள் வீட்டுக்கு ஒரு எங்கள் உயிரை தத்து எடுத்தாவதும் எங்கள் இன்னோர் உயிரை நாங்கள் உண்ணும் கூழோ கஞ்சியோ கொடுத்துக் காப்பாற்ற எங்களுக்கு தெரியும். கட்டாயமாக நாங்கள் காப்போம் எங்கள் இன்னோர் உயிரை. இயற்கையே காப்பாற்று என் இன்னோர் உயிரான எம் இலங்கைத் தமிழர்களை. காப்பாற்று, காப்பாற்று, காப்பாற்று.