பாலிவுட்டில் கலக்கல் ஆட்டம் போட்டு, ரசிகர்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை சோபி சவுத்ரி, தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசமாக்க தயாராகி வருகிறார். முன்பெல்லாம் கவர்ச்சி பாடலுக்கு ஆட்டம் போடுவதற்கென்றே ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் இருந்தனர். இப்போது படத்தின் நாயகிகளே காட்டவேண்டிய அத்தனை கவர்ச்சியையும் காட்டி விடுவதால், கவர்ச்சி நாயகிகளுக்கு வேலையே இல்லாமல் போய் விடுகிறது. இருப்பினும் நம் ரசிகர்களின் வித்தியாசமான ரசனையை உணர்ந்துள்ள ஒருசில டைரக்டர்கள் மும்பைக்கு பறந்து போய், அங்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நடிகைகளை கூட்டி வந்து கெட்ட ஆட்டம் போட வைத்து, ரசிகர்களை குதூகலிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவதுடன், ஒட்டுமொத்த படத்தில் நடிக்கும் நடிகையை விட அதிக சம்பளத்தையும் ஆட்டையை போட்டுவிட்டு பறந்து விடுவதுதான் மும்பை ஹைடெக் ஐட்டம் டான்சர்களின் வாடிக்கை.
அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகப் போகிறவர் புதுவரவு சோபி. இந்தியில் ஹெவி பேபி, டாடி கூல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை சூடேற்றிய இந்த சோபி, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோ விஷாலுடன் கெட்ட ஆட்டம் போடப் போகிறாராம். பாலிவுட்டில் இருந்து எத்தனை நட்சத்திரங்கள் வந்து குத்தாட்டம் போட்டாலும் குதூகலத்துடன் வரவேற்பதுதான் நம் தமிழ் குமாரர்களின் குணம். அம்மணியின் கொடியும் தமிழகத்தில் பறப்பது நிச்சயம்! அந்த அளவுக்கு மறக்க முடியாத சாக்லேட் பேபியாக இருப்பாராம் இந்த சோபி!

15 March 2011 at 4:44 am
beautiful face...